செவ்வாய், 5 மார்ச், 2013

முஹம்மத் (ஸல்) அவர்களின் வாழ்க்கை



இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களின் வாழ்க்கையை நாம் மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம்.
1. பிறப்பு முதல் நபித்துவம் வரை.
2.
நபித்துவம் முதல் நாடு துறத்தல் வரை.
3.
மதீனா முதல் மரணம் வரை.
பகுதி ஒன்றுகி.பி 571ல் பனூஹாஷிம் பள்ளத்தாக்கில்-மக்கா நகரில்-ரபீவுல் அவ்வல் மாதம் திங்கள் கிழமை பிறந்தார்கள்.
கி.பி 571ல் பனூஹாஷிம் பள்ளத்தாக்கில்-மக்கா நகரில்-ரபீவுல் அவ்வல் மாதம் திங்கள் கிழமை பிறந்தார்கள்.(பிறை 12ல் பிறப்பு என்பதற்கு ஆதாரபூர்வமான எந்த குறிப்பும் இல்லை) அபூலஹப் பிறந்த விழா கொண்டாடினான் என்பதுஅல் குர்ஆனின் 111 வது அத்தியாயத்திற்கு மாற்றமான ஆதாரமற்ற செய்தியாகும்.
குழந்தைப் பருவம்
தன் தாயார் ஆமினாவிடமும், செவிலித்தாய் ஹலிமாவிடமும் பால் குடித்து வளர்ந்துள்ளார்கள்.
4 வயதில் விளையாடும்போது ஜிப்ரயீல் வந்து நெஞ்சை பிளந்து இதயத்தைத் தூய்மைப் படுத்தினார்கள்.(இந்த செய்தி பல குர்ஆன் வசனங்களுக்கும் சில ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களுக்கும் மாறுபடுவதால் இதில் கருத்து வேறு பாடு உள்ளது.)
6 வயதில்
மதினாவிலுள்ள தன் கணவரின் மண்ணறையை ஜியாரத் செய்து விட்டு மக்கா திரும்பும் வழியில் அப்வா என்ற இடத்தில் தாயார் ஆமினாவின் மரணம். பாட்டனார் அப்துல் முத்தலிபின் பொறுப்பில் வாழ்க்கை.
8 வயதில்
பாட்டனார் மரணித்தப் பிறகு சிறிய தந்தை அபுதாலிப் அவர்களின் மேற்பார்வையில் வாழ்க்கை.
12 வயதில்
சிறிய தந்தையுடன் வியாபாரத்தில் ஈடுபடல் (ஒருமுறை சிறிய தந்தையோடு ஷாம் நாட்டிற்கு வியாபாரத்திற்கு போகும்போது பஹீரா என்ற துறவி ஒருவர் இறுதித் தூதர் என்று முன்னறிவிப்பு செய்கிறார் இப்படிஒரு செய்தி திர்மிதி-ஹாக்கிம் ஆகிய நூல்களில் இடம் பெறுகிறது. ஆனாலும் இவை ஆதாரப் பூர்வமான செய்திகளல்ல.)
20 வயதில்
குறைஷ், கைஸ் கோத்திரங்களுக்கு மத்தியில் நடந்த ஹிஸ்புல் புளூல் என்ற பாதுகாப்பு ஒப்பந்தக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள். 25 வயதில் கதீஜா என்ற பெண்மணியிடம் வியாபாரியாக வேலை. அதே ஆண்டு 40 வயதான அந்தப் பெண்மணியின் விருப்பத்திற்கிணங்கி அவரை முதல் மனைவியாக ஏற்றுக் கொண்ட திருமணம்.
35 வயதில்
இறை இல்லமான கஃபா புதுப்பிக்கும் பணி. ஹஜருல் அஸ்வத் என்ற கருப்புக்கல் பிரச்சனையில் பெரும் சர்ச்சை எழ அதை சுமூகமாக தீர்த்து வைத்தல்.
37 வயதில்
தனிமை விருப்பம் ஏற்பட்டு ஹிரா குகையை தேர்ந்தெடுத்து அங்கு சென்று தங்குதல்.
பகுதி இரண்டு
40 வயதில்
ஜிப்ரயீலுடன் முதல் சந்திப்பு. இறைத்தூதராக நியமிக்கப்படுகிறார்கள். குர்ஆன் வசனம் இறங்குகிறது. ஏகத்துவத்தை நோக்கி இரகசிய அழைப்பு.
44 வயதில்
தன் மீதும் முதல் விசுவாசிகள் மீதும் மக்காவின் எதிர்ப்பாளர்களின் துன்புறுத்தல் அதிகமாதல்.
45 வயதில்
இறைத்தூதரின் கட்டளைப்படி இரு குழுக்களின் முதல் ஹிஜ்ரத் எத்தியோப்பியாவை நோக்கிப் பயணம்.
46 வயதில்
உமர் மற்றும் ஹம்ஸா ஆகியோர் இஸ்லாத்தை ஏற்றல்.
47 வயதில்
அபூ தாலிப் பள்ளத்தாக்கிற்கு விரட்டப்படுகிறார்கள். புகலிடம் அளித்ததற்காக பனூ ஹாஷிம் பனூ முத்தலிப் கூட்டத்தினரும் ஊர் விலக்கம் செய்யப்பட்டனர்.
50 வயதில்
50
வயதில் தனக்கு பெரும் துணையாக இருந்த சிறிய தந்தை அபுதாலிபும் அருமை மனைவி கதீஜாவும் மரணமடைகிறார்கள். நபி(ஸல்)அவர்களுக்கு அது துக்க ஆண்டாகவே இருந்தது.
51 வயதில்
வயதில் மக்காவிற்கு வெளியே தன் பிரச்சாரத்தை துவங்கி தாயிப் செல்கிறார்கள். அங்கு கடினமான தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள். மக்காவிற்கு வெளியில் சந்தை கூடும் இடங்களுக்கு வரும் மக்களையும் ஹஜ்ஜுக்கு வரும் மக்களையும் சந்தித்து பிரச்சாரம் செய்கிறார்கள். மதீனாவில் இஸ்லாமிய சிந்தனை எட்டுகிறது. ஆயிஷாவுடன் திருமணம் நடைபெறுகிறது
52 வயதில்
மக்காவிலிருந்து விண்வெளிப் பயணம் தொழுகை கடமையாகிறது.
53 வயதில்
இரண்டாவது பைஅத்துல் அகபா நடைப் பெறுகிறது.
பகுதி மூன்று
53 வயதில்
முதல் குழுவாக முஸ்லிம்களும் தொடர்ந்து இறைத்தூதரும் மதீனாவை நோக்கி ஹிஜ்ரத் பயணம். இஸ்லாமிய புதிய வரலாற்றுக்கான துவக்கம். அமோக வரவேற்புடன் மதினாவின் புதிய சாசனம் வரையறுக்கப்படுகிறது.
54 வயதில்
பத்ரு யுத்தம், இறை நிராகரிப்பவர்கள் 1000 பேரை முஸ்லிம்கள் 313 பேர்கள் யுத்தகளத்தில் சந்தித்து வெற்றிப் பெறுகிறார்கள்.(ஹி: 2)
55 வயதில்
உஹது யுத்தம், 3000 இறை நிராகரிப்பவர்களை 700 முஸ்லிம்கள் களத்தில் சந்திக்கிறார்கள். சில காரணங்களால் முஸ்லிம்களுக்கு நிறைய இழப்பு. (ஹி: 3)
58 வயதில்
பனு முர்ரா, கத்பான், கிஸ்ரா கோத்திரங்கள் அடங்கிய 10,000 பேர்களுடன் 3000 முஸ்லிம்கள் போர் செய்கின்றனர். இதுதான் (கந்தக்) அகழ் யுத்தம். இதில் முஸ்லிம்களுக்கு வெற்றி.(ஹி: 5)
59 வயதில்
தனது 1400 தோழர்களோடு உம்ரா செய்ய மக்கா செல்ல ஹூதைபியா என்ற இடத்தில் மக்காவின் இறை நிராகரிப்பவர்களால் தடுக்கப்பட்டு ஹூதைபியா உடன்படிக்கை நடக்கிறது.(ஹி: 6)
60 வயதில்
கைபர் போர் யூதர்களுடன். முஸ்லிம்கள் வெற்றிப் பெறுகிறார்கள். (ஹி: 7)
61 வயதில்
கத்தியின்றி.இரத்தமின்றி யுத்தம் எதுவுமின்றி முஸ்லிம்கள் தம் சொந்த மண்ணான மக்காவை வெற்றிக் கொள்கிறார்கள்.(ஹி: 8)
62 வயதில்
முஸ்லிம்களை ஒழிக்க 40,000 ரோமர்கள் தபூக் வருகிறார்கள், இவர்களை 30,000 முஸ்லிம்கள் எதிர்த்துப் போராடி பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
(
ஹி: 9)
63 வயதில்
ரபிவுல் அவ்வல் பிறை 12ல் தனது இறைத்தூதர் பணியை நிறைவு செய்து மரணமடைகிறார்கள்;. (இன்னாலில்லாஹி…………………………)
(
இறப்பு ரபீவுல் அவ்வல் பிறை 12என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது)
வாழ்வு முழுவுதும் நான்கே வரிகளில்
இருமூன் றில்தாய் இழந்தநபி, இருபத்தைந்தில் மணந்தநபி,
அருநாற் பதிலே நிறைந்தநபி, அறபான் மூன்றில் மறைந்த நபி

5 கருத்துகள்:

  1. மாஷா அல்லாஹ் அற்புதமான செய்தி சதீத் பாணியில் யாரும் சிந்திக்காத செய்தியை அளித்தீர்கள்

    பதிலளிநீக்கு
  2. ஏன் இந்த வக்க்க்க்க்க்க்க்க்க்க்கிரமம் போப் செய்தியை
    நீங்களாவது வெளியிடக்கூடாதா?
    மீடியா அஜாஸீலுக்கே அப்பனாச்சே!
    ( மன்னிக்கவும் வயிறு எரிச்சல்)

    பதிலளிநீக்கு