சனி, 18 ஆகஸ்ட், 2012

பூரண மது ஒழிப்பு சாத்தியமே!

பெருநாள் ஆய்வு கட்டுரை பூரண மது ஒழிப்பு சாத்தியமே! [ மது அருந்துபவனுக்கு மணமுடித்து வைக்காதீர்கள். அவன் நோயுற்றால் நோய் வினவச்செல்ல வேண்டாம். அவன் இறந்துவிட்டால் ஜனாசா தொழுகை தொழ வேண்டாம். என்னை நபியாக அனுப்பியவன் மீது ஆணையிட்டு கூறுகிறேன். மது அருந்துபவன் தவ்ராத், சபூர், இன்ஜீல் குர்ஆன் ஆகிய நான்கு வேதங்களாலும் சபிக்கப்பட்டவனாவான். அவனுக்கு உதவி செய்வது இஸ்லாத்தையே இடிப்பதற்கொப்பாகும்" என அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்ற இந்த அருள் மொழியை அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கின்றார்கள். மது ஒழிப்பு சாத்தியமே! அவன் குடித்தான்.. தள்ளாடியது... அவன் குடும்பம்! என்று சொல்லுவார்கள். ஒரு மனிதனை இந்த குடிப்பழக்கம் அவல பாதாளத்தில் தள்ளி, எட்ட நின்று எள்ளி நகையாடும், மகா கொடிய மிருகம் என்றால் அது மிகையாகாது. புஜங்கள் திமிரும் பலம் பொருந்திய,அறிவு பொதிந்த, ஆட்சி அதிகாரங்கள் கொண்ட அரசனாக இருந்தாலும், இந்த குடியில் வீழ்ந்தால்.. எழுவது வீதியில் தான் என்பதில் யாவருக்கும் மாற்றுக் கருத்தில்லை. இறைவனின் முதல் கட்டளை செய் என்பதல்ல. செய்யாதே.. என்பதுதான். இறைவன் ஆதாம் ஏவாலை படைத்தபின் அவர்களிடம் கூறும் முதல் கட்டளை ஒருகுறிப்பிட்ட மரத்தில், அதாவது அறிதலைத் தருக்கூடிய மரத்தில் உள்ள கனியை உண்ணக்கூடாது என்பதுதான். இதில் ஒரு கோட்பாட்டு உள்ளடக்கப் பட்டுள்ளது. அது மனிதமனம் எதிர்மறையில்தான் கட்டமைக்கப்படுகிறது எனபது தான். இந்த சோதனைக் களத்தில் வெற்றி பெறுபருக்குத் தான் ஈருலக வாழ்க்கையும் வளம் பெறும். இன்றும் ஆங்கிலத்தில் சாராயத்தை குறிக்க அரபி மூலத்திலிருந்து பெறப்பட்ட அராக் (arrack) என்கிற சொல்லே பயன்பட்டு வருகிறது. ஆல்கஹால் என்ற சொல் அரேபிய மொழியில் வழங்கப்பட்ட அல்-கோஹல் (al-kuhul) என்ற சொல்லின் மூலத்திலிருந்து தான் வந்ததாகவும், அரேபியாவிலிந்து ஆல்கஹால் மத்தியதரைக்கடல் நாடுகள் முதல் ஐரோப்பியா வரை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அராபிய பாலைவனத்தில் 'ஜாஹிலியா' என்று சொல்லக் கூடிய அறியாமை காலத்தில் பெண் பிள்ளைகளை உயிருடன் குழி தோண்டிப் புதைத்த மகா பாதக கொடுமைகளை அரங்கேற்றிய காட்டரபிகள் விபச்சாரம்,கொலை, கொள்ளை மட்டுமல்லாமல், குடம் குடமாக மது அருந்திய ஒரு சமுதாயம், தங்களை முழுவதுமாக மாற்றிக் கொண்டு மதுக் குடங்களை தெருவில் போட்டு உடைத்து, திருந்திந்திய வரலாற்றுப் பதிவுகள், இந்த பூவுலகை இன்றும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. ஆகவே இந்த அறிவை மழுக்கும் மதுவை இன்றைய சமுதாயம் முழுமையாக விலக்குவது சாத்தியமா ? என்பதை சமூகத்தின் பார்வையிலும், இஸ்லாமிய வழிகாட்டுதல்களின் மூலமும் ஆராய்ந்து பார்ப்போம். இஸ்லாமிய ஆரம்ப காலத்தில் முஸ்லீம்கள் மது அருந்திக்கொண்டிருந்தனர். அப்போது அது பற்றி எத்தகைய சட்டமும் இல்லாதிருந்ததால், அது அனுமதிக்கப்பட்டதாகவே கருதப்பட்டு வந்தது. முஸ்லீம்கள் திருமதீனா வந்த பின்னர் ஹஜ்ரத் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களும் சில அன்சாரித்தோழர்களும் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கூறினார்கள் : 'அல்லாஹ்வின் தூதரே ! மதுவையும் சூதாட்டத்தையும் பற்றி எங்களுக்கு ஒரு தீர்ப்பு வழங்குவீர்களாக. அவை அறிவை கெடுக்கின்றன. பொருளை நாசம் செய்கின்றன என்று கூறினார்கள்' அப்போதுதான் அல்லாஹுத்தாஆலா குர்ஆனில் இந்த வசனத்தை இறக்கி வைத்தான். "மதுவையும் சூதாட்டதையும் பற்றி (நபியே) உம்மிடம் அவர்கள் கேட்கிறார்கள். அவ்விரண்டிலும் பெரிய பாவமும் மனிதர்களுக்கு சில பிரயோஜனங்களும் இருக்கின்றன. ஆயினும் இவ்விரண்டின் மூலம் ஏற்படும் பாவம் அவற்றின் பிரயோஜனத்தைவிட மிகப் பெரியதாகும் என்று நீர் பதில் கூறும் (அல்குர்ஆன்)" மேற்கண்ட இவ்வசனத்தின் மூலம் விடையும் கிடைத்தது. எனினும் கண்டிப்பாக மது அருந்தக்கூடாது என்று இவ்வசனத்தின் மூலம் ஆரம்பத்தில் தடை விதிக்கப்படவில்லை. அவ்விரண்டிலும் பெரிய பாவமும் மனிதர்களுக்கு சில பிரயோஜனங்களும் இருக்கின்றன என்று மட்டும் கூறப்பட்டதால் பாவம் என்று கருதிய சிலர் அதை விட்டனர். அதில் சில பலன்கள் உண்டு என கருதியோர் அதை அருந்தினர்.ஆனால் அனைத்து பாவங்களுக்கும் தலையாயதாக, பாவங்கள் செய்ய தூண்டுகோலாக, தலைவாசலாக இந்த மதுப் பழக்கம் இருப்பதினை உணர்ந்த அரபியர்கள் குடிப்பழக்கத்திலிருந்து முழுவதுமாக விடுபட இறைவன் விரைவிலேயே நல் வழி காட்டினான். மதுவருந்துதல் அரேபியர்களின் அன்றாட பழக்கமாக இருந்தது. அதனால் பலன்கள் அதிகமுண்டு எனக்கருதி அதனை விடாது அவர்கள் அருந்தி வந்தனர். முதல் தடவையிலேயே மது அருந்தக்கூடாது என கடுமையான தடை விதிக்கப்பட்டால் அதனை அமுல் நடத்துவது அவர்களுக்கு சிரமமாகிவிடும். அதனால் தான் சிற்கச்சிறுக பலவிதமாக அதன் கெடுதிகளை உணர்த்திக்கொண்டே வரப்பட்டது. இறுதியில் மது தீங்கு விளைவிப்பதே என அவர்கள் உணர்ந்ததும் பூரணமாக தடை விதிக்கப்பட்டது. அச்சமயம் அதை அமுல் அமுல்படுத்துவதற்கும் அவர்களுக்கு எளிதாகி விட்டது. கண்டிப்பாக மது அருந்தக்கூடாது என்ற சட்டம் வந்தது ஏன்? என்பதை பின் வரும் ஹதீஸ் விளக்குகிறது. ஹஜ்ரத் அப்துல் ரஹ்மான் பின் அவ்ஃப் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்து அதற்கு நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தோழர்கள் சிலரை அழைத்திருந்தார்கள். விருந்தினருக்கு உணவு பரிமாரப்பட்டது. அதில் பண்டைய வழக்கப்படி மதுவும் வைக்கப்பட்டிருந்ததால் விருந்தினர் அதையும் அருந்தினர். மஃரிப் தொழுகைக்கான நேரம் வந்துவிட்டதால் யாவரும் எழுந்தனர். அவர்களில் ஒருவர் இமாமாக முன் நின்று தொழ வைக்க சென்றார். போதை தலைக்கேறியிருந்த சமயம். அதனால் "காஃபிரூன் என்ற அத்தியாயத்தை ஓதிய அவர் காஃபிர்களே! நீங்கள் வணங்கிக்கொண்டிருப்பதை நான் வணங்க மாட்டேன் என்று இருக்கும் வசனத்தில் வணங்கமாட்டேன் என்பதை வணங்குவேன் என்று மாற்றி ஓதிவிட்டார். இதனை உத்தேசித்து உண்மை விசுவாசிகளே ! நீங்கள் போதையாக இருக்கும் நிலையில் தொழுகையின்பால் நெருங்காதீர்கள் (அல்குர்ஆன் 4:43) என்னும் வசனம் அடுத்து இறக்கப்பட்டது. போதையாக இருக்கும் போது தொழக்கூடாது என்றுதான் தடை விதிக்கப்பட்டது. இதனால் மது அருந்துவோர் இரவின் பிற்பகுதி தொழுகையான இஷாவை முடித்துக்கொண்டு மது அருந்துவிட்டு தூங்கிவிடுவர். காலை எழுந்திரிக்கும் போது போதை தெளிந்திருக்கும். பஜ்ர் தொழுகையை நிறைவேற்றிவிட்டு பிறகு மது அருந்துவார்கள். மதியம் லுஹர் தொழுகையின் போது அது தெளிந்துவிடும். இந்நிலை சில நாட்கள் நீடித்தது. ஆனால் மது அருந்துவது அறவே தவிர்க்கப்படவில்லை . பின்பு உதுமான் பின் மாலிக் என்பவர் ஒரு விருந்து வைத்து முஸ்லீம்கள் சிலரை அதற்கு அழைத்தார். அழைக்கப்பட்டவர்களில் ஸஃதுபின் அபீவக்காஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களும் ஒருவர். அவ்விருந்தில் ஒட்டகத்தின் தலை பொரித்து வைக்கப்பட்டிருந்த்து. அதனை அனைவரும் ரசித்து புசித்துவிட்டு அதற்கு மேல் வேண்டிய மட்டும் மதுவை அருந்தினர். மிதமிஞ்சிய போதையால் ஆடலும் பாடலும், குடும்ப பெருமை பற்றிய புகழ்பாக்களும் கிளம்பிவிட்டன. ஸஃதுபின் அபீவக்காஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களும் ஒரு கவிதை புனைந்து அதில் தன் மரபினரை பெருமைபடுத்தியும் மதினா வாசிகளான அன்சாரிகளை இகழ்ந்தும் பாடினார். இது அன்சாரிகளில் ஒருவருக்கு ஆத்திரத்தை மூட்டியது. ஒட்டகத்தின் எழும்பொன்றை எடுத்து ஸஃது அவர்களின் தலையில் ஓங்கி அடித்து காயப்படுத்திவிட்டார். ஸஃது அவர்கள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சென்று முறையிட்டார்கள். அப்பொழுது அங்கிருந்த ஹஜ்ரத் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் இறைவா! மது விஷயத்தில் தெளிவான கட்டளையை தெரிவிப்பாயாக என்று வேண்டிக்கொண்டார்கள். இதன் பின்னர்தான் அறவே மது அருந்தக்கூடாது என்ற கட்டளை பிறந்தது. இதனை தாங்கிய வசனம் அல்மாயிதா என்ற அத்தியாயத்தில் வருகிறது. (ஆதாரம்: புகாரி, முஸ்லீம்) மனிதனின் அறிவை மாற்றி மிருகத்திற்கு ஒப்பாக்கி வைக்கும் மதுவை அருந்துதல் கொடிய குற்றமாகும். கள்ளை தவிர்த்துக்கொள்ளுங்கள். ஏனெனில் அது கெடுதிகள் அனைத்திற்கும் தாயாகும். அல்லாஹ்வின் மீது பிரமாணமாக உண்மை விசுவாசமும் கள் குடித்தலும் ஒன்று சேராது. இரண்டில் ஒன்று மற்றொன்றை அப்புறப்படுத்திவிடும் என்று நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். (அறிவிப்பவர் : உதுமான் ரளியல்லாஹு அன்ஹு அவ்ர்கள். நூல்: நஸாஈ) மது அருந்துவோர் குற்றவாளியாக இருப்பது போல அவர்களுக்கு உதவியாக இருப்போரும் குற்றவாளிகளே!. நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மது சம்பந்தமாக 10 பேர்களை சபித்துள்ளார்கள். 1) மதுவை காய்ச்சுபவர், 2) அதனை காய்ச்சுவதற்கு உதவுபவர், 3) அதை குடிப்பவர், 4) அதனை புகட்டுபவர், 5) அதனை சுமந்து செல்பவர், 6) அதனை சுமந்து செல்ல ஏற்பாடு செய்பவர், 7) அதனை விற்பனை செய்பவர், 8) அதை வாங்குபவர், 9) அதனை வெகுமதியாக கொடுப்பவர், 10) அதனை விற்றுப் புசிப்பவர் ஆகியோர். (அறிவிப்பவர் : ஹஜ்ரத் அனஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதி) எவருடைய வயிற்றில் மதுபானம் போய் நுழைந்ததோ, அவரின் ஏழு நாட்களின் தொழுகை ஒப்புக்கொள்ளப்பட மாட்டாது. மதுபானம் அருந்தியதால் எவருடைய அறிவு போதையாகிவிட்டதோ அவரின் நாட்பது நாட்களின் நன்மைகளை இறைவன் ஏற்றுக்கொள்ள மாட்டான். இந்த நாற்பது நாட்கள் கழியுமுன் அவன் மரணமாகிவிட்டால் காபிராகவே (இறை நிராகரிப்பாளனாகவே) மரணிப்பான். ஆனால் பாவமன்னிப்பு கேட்டு மீண்டும் மது குடிப்பானேயானால் அவனுக்கு நரகில் 'தின்யத்துல் கபால்' என்னும் நீர் புகட்டப்படும். அப்போது சஹாபாக்கள் யா ரசூலுல்லாஹ்! தின்யத்துல் கபால் என்றால் என்ன ? என்று கேட்டார்கள். தின்யத்துல் கபால் என்பது நரகவாதிகளுடைய சீலும், சலமும், இரத்தமும் கலந்த கொதி தண்ணீர் என கூறினார்கள். குடித்தவன் எவ்வளவு படித்தவனாக இருந்தாலும், எத்தகய ஈமான் கொண்ட சீமானாக இருந்தாலும், அவன் அல்லாஹ்வின் அன்புக்குறியவனாக ஆக முடியாது. அவன் இறக்கும் வரை ஈமானை இழக்காமல் இதயத்திலேயே வருத்தியிருந்தாலும் கூட எத்தகய சிறப்பும் பெற்றுவிட முடியாது. மதுமேல் அவன் கொண்ட மோகம் அவனின் ஈமானின் பாகத்தை பறித்துவிடும். மதுபானம் குடித்து மகிழ்ந்திருப்பவன், அதில் மயங்கியிருப்பவன் மாண்புடைய ஈமானையும் கொண்டிருப்பானாயின் அந்த ஈமான் அவனிடமிருந்து பறிக்கப்பட்டே தீரும். ஆகவே அவன் இறப்பதற்கு முன்னேயே அவனிடமுள்ள ஈமான் இறந்து விடும். இதற்கோர் எடுத்துக்காட்டு : ஷைக் அப்துல் அஜீஸ் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் சொல்கிறார்கள், ஒரு சமயம் நான் பள்ளிக்கு சென்றுகொண்டிருந்தேன். அப்போது வழியில் பெண்கள் கூட்டமாக அழுதுகொண்டிருந்தார்கள்.இதைக்கண்ட நான் அவர்களிடம் சென்று ஏன் அழுதுகொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர்கள் அண்டை வீட்டில் ஒருவர் சக்ராத் நிலையில் கிடக்கிறார். அவர் வாயில் ஷஹாதத் கலிமா சொல்ல வரவில்லை. நாங்கள் பலமுறை சொல்லிக்கொடுத்தோம். அப்படியும் அவரால் அதை சொல்ல முடியவில்லை. ஆகவே நீங்கள் அதை சொல்லிக்கொடுத்தால் ஒரு வேலை அவர் சொன்னாலும் சொல்லக்கூடும் என்று என்னிடம் கேட்டுக்கொண்டார்கள்.நானும் சென்று அம் மனிதனுக்கு எத்தனையோ முறை கலிமா ஷஹாதத்தை சொல்லிக்கொடுத்தேன். அப்போதும் அவர் சொல்லவேயில்லை. இறுதியாக திடீர் என்று கண் விழித்தார். நான் சொன்ன கலிமாவை மட்டும் காதால் கேட்டார். கேட்ட உடனேயே நான் இஸ்லாத்தை வெறுக்கிறேன் என உரத்துச் சப்தமிட்டார். அந்த சப்தத்துடன் அவரது ஆவி பிரிந்தது. உடனே நான் அப்பெண்களிடத்தில் இவர் காபிராக மரணித்துவிட்டார். ஆகவே இவருக்கு ஜனாசா தொழ வைப்பதோ முஸ்லீம்களின் அடக்க ஸ்தலங்களில் அடக்கம் ச்ர்ய்வதோ கூடாது என்று சொல்லிவிட்டு வந்து விட்டேன். பின் அந்த இறந்தவரின் உறவினர்களை அழைத்து இவர் தன் ஜீவியத்தில் என்ன செயல்களை செய்துகொண்டிருந்தார் என்று கேட்டேன். இதற்கவர்கள் இவர் தனது ஜீவியத்தில் ஒழுங்காக தொழுது இறைவனுக்கு பிரியமான பல காரியங்களும் செய்து வந்தார். ஆனால் மது அருந்துவதை மட்டும் தன் பழக்கமாக கொண்டிருந்தார் என கூறினார்கள். நான் உடனே இவர் மது அருந்துவதை பழக்கமாக கொண்டதால் இவரின் ஈமான் பறிக்கப்பட்டு விட்டது என்று கூறினேன். இவ்வாறு அப்துல் அஜீஸ் ரஹ்மதுல்லாஹி அலைஹி அறிவிக்கிறார்கள். மது ஓர் உணவு அல்ல. போதைப் பொருள். பதார்த்தங்கள் கெடுவதிலிருந்து தயாரிக்கப்படும் பொருள். மிகக் கொடிய விஷம். மதுவினால் குடிகள் பல கெட்டன என்பதை நாம் அறிவோம். அகால மரணம், கொலை, திருடு, விபச்சாரம் எல்லாம் மதுவினாலேயே உண்டாகின்றன. ஞாபகசக்தியும் சிந்தனை ஆற்றலும் சிதைந்து போகும். புத்தி, நிதானம் குலைந்து மன ஒழுங்கையும் அடக்கத்தையும் சீரழித்து விடுவது மதுபானம். மதுவால் இரைப்பை, கல்லீரல், இரத்தக் குழாய்கள், சிறுநீரகம், நரம்பு மண்டலம் இவற்றிற்குப் பெரும் கேடு உண்டாகிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து விடும். பஞ்சமாதபாதங்களில் மது குடிப்பதும் ஒன்று. மதுவால் வரும் கேடு பற்றி நமது தமிழ் நூல்கள் பலவும் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளதுடன் அப்பழக்கத்தைக் கைவிடுவதே மேலானது என்பதையும் சிறப்பாக வலியுறுத்தியுள்ளன. "துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும் நஞ்சுண்பார் கள்ளுண் பவர்." என்று திருவள்ளுவர் கல் உண்ணும் மாந்தர்களை இழிந்துரைக்கிறார். மதுபானமானது பாவங்களை சேகரிக்கும் மிகப்பெரும் கருவியாகும். மதுபானம் அருந்துபவர் சிலைகளை வணங்குபவர் போல் ஆவார். மதுபானம் அருந்துபவரை இறைவன் சபிக்கிறான். மேலும் அவன் மீது இறைவனின் சாபமும் ஏற்படுகிறது. மது பானம் அருந்துபவரின் ஈமான் பரிக்கப்பட்டுவிடும். ஏனெனில் மதுபானமும் ஈமானும் ஒன்று சேராது. எவராகிலும் மதுபானம் அருந்தினவருக்கு ஸலாம் சொன்னாலும் அவனை அனைத்துப்பிடித்தாலும் அவரின் 40 நாடளின் நன்மைகள் அழிக்கப்படும். மது அருந்துபவரின் நிலை இப்படியென்றால் மதுக்கடைகளை வைத்துக்கொண்டு பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு கொடுக்கிறார்களே அவர்களின் நிலை என்னவாகும்? அகிலத்தை படைத்து ஆட்சி செய்யும் ஏக அல்லாஹ்வின் ஆணை பெரிதல்லவா? சில முஸ்லீம்கள் ஐங்காலமும் தொழுது வருகிறார்கள். ஆயினும் மது வியாபாரத்தொழிலை செய்து வருகிறார்கள். ஏன் இப்படி செய்கிறீர்கள் என கேட்டால் நாங்களென்ன குடிக்கவா செய்கிறோம். வியாபாரம்தானே செய்கிறோம் என்று கூருகிறார்கள். அவர்கள் கொடுக்கின்ற மது பாட்டில்கள் எத்தனை குடும்பங்களை குட்டிச்சுவராக்கியுள்ளன. எத்தனை மானங்கெட்ட ஈன பிறவிகளை எல்லாம் உருவாக்கியுள்ளன? மதுபானம் குடிப்பவன்,விற்பவன்,அதற்கு உதவி செய்பவன் அனைவருக்கும் ஒரே தண்டனைதான் என்று நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியிருப்பதை அவர்கள் எண்ணிப்பர்க்க வேண்டும். மது அருந்துபவனுக்கு மணமுடித்து வைக்காதீர்கள். அவன் நோயுற்றால் நோய் வினவச்செல்ல வேண்டாம். அவன் இறந்துவிட்டால் ஜனாசா தொழுகை தொழ வேண்டாம். என்னை நபியாக அனுப்பியவன் மீது ஆணையிட்டு கூறுகிறேன். மது அருந்துபவன் தவ்ராத், சபூர், இன்ஜீல் குர்ஆன் ஆகிய நான்கு வேதங்களாலும் சபிக்கப்பட்டவனாவான். அவனுக்கு உதவி செய்வது இஸ்லாத்தையே இடிப்பதற்கொப்பாகும் " என அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்ற இந்த அருள் மொழியை அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கின்றார்கள். மது அருந்துவது மா பாதகச்செயல். அது மதியை மங்க வைத்துவிடும். புனிதமிகு மனிதனை கொடிய மிருகமாக்கி விடும் என்பதை மதியுடையோர் அனைவரும் நன்குணர்வர். மது அருந்துவதை சர்வ சாதாரண செயலாகக்கொண்டு நாள்தோரும் பல முறை குடித்து குடித்து கும்மாளமிட்ட அரேபியர்களிடையே மதுவின் தீமைகளை படிப்படியாக துணிந்துரைத்து, இறுதியில் மதுவிலக்கை அமுல் நடத்தி வெற்றி கண்ட பெருமை வேந்தர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களேயே சாரும். யார் அல்லாஹ்வையும் ம்றுமை நாளையும் விசுவாசம் கொண்டுள்ளாரோ அவர் மதுக்குவலையின் அருகில் கூட அமர வேண்டாம் என அருமை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எச்சரித்தார்கள். அவர்களது அறிவுரையை கேட்ட அரேபிய முஸ்லீம்கள் தங்கள் இல்லங்களிலிருந்த மதுக்குவலையை உடைத்து நொருக்கிய போது மதீனாவின் வீதிகளில் அம்மதுவானது ஆறென பெருக்கெடுத்து ஓடியது. மது அருந்துபவன் இஸ்லாத்தின் துரோகி மட்டுமல்லாமல் நாட்டின் துரோகியுமாவான். மது அருந்துவதனால் பல வகையான இழி தன்மைகள் ஏற்படுகின்றன. எனவே அதை விட்டு நீங்கி கொள்ளுமாறு உம்மை எச்சரிக்கிறேன் என அறிஞர் பகீஹ் அபூலைத் ரஹ்மதுல்லாஹி அலைஹி என்பார் அறிவிக்கிறார். யோரின் வேதனை அனைவருக்கும் : நபிகள் நாயகம் அவர்கள் சொல்கிறார்கள். என் சமுதாயம் கீழ் காணும் பதினைந்து வஷயங்களை செய்தால் சிகப்பு காற்று பூகம்பம், உருமாற்றம், கல்மாரி எனத்தொடர்ச்சியான பல வேதனைகள் நிகழும். அதில் மது அருந்துவதும் இடம் பெறுகிறது. (நூல் : மிஷ்காத்). ஒரு வீட்டில் தீ பிடித்துவிட்டால் அதன் அருகிலுள்ளோர் அனைக்க வேண்டும். இல்லையெனில் சுற்றியுள்ள பற்பல வீட்டையும் நாசமாக்கிவிடும். இதேபோன்று தீச்செயல்களைத் தடுக்க வேண்டும். யார் எக்கேடு கெட்டுபோனால் நமக்கென்ன என்று இருந்தால் வேதனை சுடும். சமுதாயத்தில் பரவியிருக்கும் தீய செயல்களாம் வர தட்சணை. கொலை,கொள்ளை என்பன போன்றவையின் வேதனை, பாதிப்பு அனைத்து மக்களையும் துன்பத்திலும் துயரத்திலும் ஆழ்த்தியுள்ளன. அதேபோல் மது அருந்துவது சர்வ சாதாரணமாக கருதப்படுகிறது. மற்றவர்கள் குடித்தால் நமக்கென்ன? நாம் மட்டும் குடிக்காமல் இருந்தால் போதும் என்று இருந்து விட்டால் அவர்களை பிடிக்கும் வேதனை நம்மையும் செர்த்து பிடித்துக்கொள்ளும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆதலால் குடிப்பவர்களுக்கு உபதேசம் ஆதலால் குடிப்பவர்களுக்கு உபதேசம் செய்து குடியை தடுத்து நிறுத்துங்கள். அல்லாஹ் நம் அனைவரையும் அச்செய்கையை விட்டும் காப்பற்றுவானாக.. ஆமீன். கொலை, தற்கொலை ஆகிய குற்றங்களை புரிவோரில் அதிகமானோர் மது அருந்தியவர்களேயாவர்.வீடுகளில் ஏற்படும் சண்டை சச்சரவுகளுக்கும் மதுக்கடைகளில் ஏற்படும் கலகங்களுக்கும் மதுவே காரணமாகும், மது அல்லது போதை மருந்துகளின் மயக்கத்திலேயே பல தற்கொலைகள் நடக்கின்றன. நாட்டில் ஏற்படும் குற்றங்களில் 90 சதவிகிதம் மது அருந்தும் போது ஏற்படும் குற்றங்களேயாகும். மதிகெட்டு மிருக நிலைக்கு ஆளாகும் குடிகாரன் ஞாபகமிழந்து, உடல் தளர்ந்து, உள்ளம் சோர்ந்து, எண்ணும் திறனிழந்து பயனற்ற ஜடமாகி விடுகிறான். மூர்க்க தனமும், வெறிக்கூச்சலும் அவன் குடி போதையில் செய்யும் வேடிக்கைச்செயல்களும் நல்லொழுக்கத்திற்கு நேர்மாறாகி விடுகிறது. இனி எப்போதும் மதுவை தொடுவதில்லை என ஒவ்வொரு முறை குடிக்கும்போதும் சத்தியம் செய்யும் வார்த்தைகள் போல, மனோ நிலையும் எப்போதும் மாறிக்கொண்டேயிருக்கிறது. கோபமும் அதைத்தொடர்ந்து அழுகையும் உடனே வெடிச்சிரிப்பும் சிறிதும் வெட்கமின்றி வெளிப்படுத்துவான். அவனுக்காகவோ அல்லது குடி வெறியால் மற்றவர்களுக்கு விளையும் தொல்லைகளுக்காகவோ சிறிதும் கவலைப்படுவதில்லை. இதுவே இவர்களின் இழிநிலையாகும். இத்தகய மக்களால் சமுதாயத்திற்கும் நாட்டிற்கும் என்ன பயன் ஏற்பட்டுவிடும்? மனிதனின் கௌரவத்தை குலைத்து அவனை நேர்மையற்றவனாக, வெட்க உணர்வு சிறிதுமற்றவனாக மது மாற்றுவதை நாம் காண்கிறோம். மது போதையில் எண்ணிப்பார்க்க முடியாத பல பயங்கர குற்றங்களை மனிதன் எல்லா நிலைகளிலும் எல்லாக்காரியங்களிலும் புரிகிறான். அதனால் அவனும் அவனது குடும்பத்தவரும் ஏன் சமுதாயமும் கூட வேதனைப்படுகிறது என்ற போதிலும் மகிழ்விக்கும் மது கோப்பையை மனிதன் கைவிட விரும்பவில்லை. இதை எதிர்த்து அனைத்து துறையினரும் முயல வேண்டும். எளிதில் திருத்த முடியாத உலகப்பிரச்சனையாக என்றும் போல இன்றும் இருந்து வருவது யாவரும் மறுக்க முடியாத உண்மை. அலுவலகத்திலிருந்து கண்ணியமாக வரும் ஒருவன், மது அருந்தும் பாருக்கு சென்று திரும்பியவுடன் அலங்கோலமாகின்றான். இதில் பாமரன் படித்தவன் என்ற பேதமின்றி நடுத்தெருவில், சாக்கடைகளில் விழுந்து கிடப்பதை அன்றாடம் நாம் கண்டு வருகின்றோம். ஒருநாளைக்கு 100 ரூபாய் சம்பாதிக்கும் ஒருவன் தனது சம்பாத்தியத்தின் முக்கால் பகுதியான 75 ருபாயை டாஸ்மாக்கில் செலவு செய்கிறான். வீட்டில் பசியோடு காத்திருக்கும் மனைவியும் குழந்தைகளும் மீதமுள்ள 25 ரூபாயில் தான் மூன்று வேளை உணவு உண்டு, பிற செலவுகளையும் செய்ய வேண்டும். பணம் போதவில்லை என்று மனைவி கேட்டுவிட்டால் அடி, உதை தான். தள்ளாடும் தமிழகத்தை கரையேற்ற நினைப்பதற்தற்கு பதிலாக மூழ்கடிக்க நினைத்ததன் விளைவு இன்று பெண்களும் வெளிப்படையாக டாஸ்மாக் கடைக்கு சென்று மது அருந்தும் பழக்கம் பேஷனாகி வருகின்றது. வரிசையில் நின்று பாட்டில் வாங்குவது மக்களுக்கு சிரமம் என்பதால் டில்லி அரசு, ஓட்டல்களில் மது பரிமாற ஏற்பாடு செய்யப் போகிறதாம். இதுவரை நட்சத்திர ஹோட்டல்களில் மட்டும் பரிமாறப்பட்டு வந்த மதுவை தற்போது அனைத்து ஹோட்டல்களிலும் பரிமாறும் புதிய மதுக்கொள்கையை டில்லி அரசு ஏற்படுத்தியுள்ளதாம். இந்திய தேசத்தின் நன்மதிப்பு, கலாச்சாரம் அனைத்தும் குழிதோண்டி புதைக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் மது விற்பனையை மாநில அரசு முழுமையாகத் தன் வசம் வைத்துள்ளது. அதிலிருந்து கிடைக்கும் வருமானத்தில்தான் பல்வேறு நலத்திட்டங்களைச் செய்வதாகவும் கூறுகிறது. மது விற்பனையால் ஏழை மக்களுக்குக் கேடுதான் அதிகமே ஒழிய அந்த வருமானத்தைக் கொண்டு அவர்களுக்குச் செய்யப்படும் நன்மை மிக மிகக் குறைவே என்பது நிதர்சனம். குடிப்பதனால் குடும்பத்திற்கு வருமான இழப்பு மட்டுமின்றி பசி, பட்டினியால் குடும்பம் வாடுவது மட்மின்றி பிள்ளைகளின் கல்வி மற்றும் எதிர்காலம் கேள்விக்குறியாகிறது. தற்போது இதுவெல்லாம் பற்றாக்குறையாக நம் தமிழக அரசு 'எலைட்' என்ற பெயரில் வெளிநாட்டு சரக்குகளை இறக்குமதி செய்து, குடிமக்களை குஷிப் படுத்த முனைந்திருப்பது கொடுமையிலும் கொடுமை. ஆல்கஹால் ஜீரண உறுப்புகள் மூலமாக மூளையை வேதிமாற்றத்தால் செயலிழக்கச் செய்துவிடும் நிலையைத்தான் போதை என்று கூறப்படுகிறது. மேலும் மூளையின் செல்கள் பாதிப்படையச் செய்த அதன் வளர்ச்சியை தடைசெய்கிறது. தனால் நினைவாற்றல் குறைவதோடு, அந்த சமயத்தில் நாம் என்ன செய்கிறோம்? என்ற பிரக்ஞைகூட இருக்காது. நாட்டில் நடக்கும் பெரும்பாலான குற்றங்கள், கொலைகள், கற்பழிப்புகளுக்கு மதுதான் காரணம் என்பதை அறிந்திருந்தும் அதை தடை செய்து மக்களை பாதுகாக்க வேண்டிய அரசே மதுக்கடைகளை நடத்துவது வேதனைக்குரிய செயலாகும்.நாட்டு மக்களின் மீது ஆட்சியாளர்களுக்கு உண்மையிலேயே அக்கறை இருக்குமானால் பூரண மதுவிலக்கை, ரத்தத்தில் ஆல்கஹாலை பீய்ச்சும் அரசு இயந்திரங்கள் அமுல்படுத்த முனைய வேண்டும். அப்போது தான் ஏழைகளின் வறுமை ஒழியும், குழந்தைகளின் கல்வி வளரும், நாடும் ஒளிரும். 'தீமைகளுக்கெல்லாம் தீமை மது' என்று சொன்னால் மிகையல்ல. இதன் மோசமான கெடுதிகளை நாம் சிந்தித்தால் மது பாவத்தின் அன்னை என்பதில் எள்ளளவும் சந்தேகம் இருக்க முடியாது. மதுவினால் விளையும் தீமைகள் அனைத்து துறைகளையும் பாதிக்கக்கூடிய உடல் நலக்கேடு, சுகாதாரக்கேடு, பொருளாதார நஷ்டம்,சமூக சீர்குலைவு, அரசியல் அநாகரீகம் என சகல மட்டங்களிலும் மதுவின் தீமைகள் பரவி கிடக்கின்றது. இத்தனை கொடுமை நிறைந்த பழக்கத்தை சிறைத் தண்டனையாலோ, அபராதம் விதிப்பதாலோ நிறுத்திவிட முடியாது. மனக் கட்டுப்பாட்டினால்தான் இதை ஒழிக்க முடியும். இவ்வுலகில் எந்த ஒரு சமயமும், மது அருந்துவதை நியாயப்படுத்தி போதனை செய்யவில்லை. "மது அருந்துவதை விட்டு நீங்கி கொள்ளுங்கள். ஏனெனில் அதுவே பாவங்களின் தாயாக உள்ளது" என்ற நபிமணியின் பொன்மொழி நமது நெஞ்சில் என்றென்றும் ஒலித்துக்கோண்டிருக்கட்டும். மதுவினால் ஏற்படும் தீமைகளை கண்ட நாம் மதியை போக்கும் மதுவே போ....... போ...... என விடைபெறுவோமாக. குடி குடியை கெடுக்கும், குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும். குடிமகன்கள் உணர்ந்திடாத வரை குடி ஒழிந்திடாது. ஒவ்வொரு தனி மனிதனும், மதுவின் தீங்குகளை உணர்ந்து மனதளவில், இறைவன் மீது ஆணையிட்டு உறுதி மொழி பூணும் பொது பூரண மது ஒழிப்பு நிச்சயம் சாத்தியமே... சாத்தியமே...

செவ்வாய், 14 ஆகஸ்ட், 2012

ரமலான் 27 - சிறப்பு பயான்

உண்மையான முஸ்லிம் யார்? முஸ்லிம் என்பதற்கு நாம் என்ன அளவுகோலை வைத்திருக்கிறோம். தாடி தலைப்பாகை தொப்பி பைஜாமா ஜிப்பா ஒரு இஸ்லாமிய பெயர். பிரியாணி போன்ற உணவு வகைகளை ஒரு பிடி பிடித்தல் இவைதான் இஸ்லாமியன் என்பதற்கு அடையாளங்களாக கருதிக் கொண்டிருக்கிறோம்۔. ஆனால் இவை மட்டுமல்ல இவையும் தாண்டி இன்னும் ஐந்து அம்சங்களை குர் ஆன் பட்டியல் போடுகிறது إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون ) الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم 1. அல்லாஹ்வின் நாமம் கூறப்பட்டால் உள்ளம் நடுங்கி இறையச்சம் உண்டாக வேண்டும்۔ 2. அவனது அத்தாட்சிகளை சொல்லிக் காண்பிக்கப்பட்டால் ஈமான் அதிகரித்து பிரகாசம் உண்டாக வேண்டும் 3. முழுமையாக இறைவனின் மீது நம்பிக்கை வைக்கவேண்டும் 4. தொழுகையை நிலைநாட்டவேண்டும்۔ 5 ۔தான தர்மம் செய்யவேண்டும் • உள்ளம் நடுங்கி இறையச்சம் உண்டாக வேண்டும்۔ நபி அவர்களுக்கு பல நேரங்களில் இவ்வாறு ஏற்பட்டுள்ளது. الآية فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا என்ற வசனத்தை ஓதி யதைக் கேட்ட நபி குழுங்கி அழுதார்கள்۔ أن رسول الله صلى الله عليه وسلم أتاهم في بني ظفر فجلس على الصخرة التي في بني ظفر ومعه ابن مسعود ومعاذ وناس من أصحابه فأمر قارئا يقرأ حتى إذا أتى على هذه الآية فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا بكى رسول الله صلى الله عليه وسلم حتى اخضلت وجنتاه ؛ فقال : يا رب هذا على من أنا بين ظهرانيهم فكيف من لم أرهم . وروىالبخاري ، عن عبد الله قال . قال لي رسول الله صلى الله عليه وسلم : اقرأ علي قلت : أقرأ عليك وعليك أنزل ؟ قال : إني أحب أن أسمعه من غيري فقرأت عليه سورة " النساء " حتى بلغت فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا قال : أمسك فإذا عيناه تذرفان . பொதுவாக சின்ன அதிர்ச்சியைக் கூட தாங்க முடியாத கோழையல்ல நபி. ஒரு சமயம் மதினாவில் நள்ளிரவில் திடீரென ஒரு சப்தம் கேட்டு மக்கள் வீட்டை விட்டு வெளியே வந்தார்கள். என்ன ஆயிற்று என்று எல்லோருக்கும் கவலை. எதிரிகள் யாரும் படையெடுத்து வந்துவிட்டனரோ என்று ஒரு பீதி. இந்த நேரம் இருட்டில் ஒரு உருவம் குதிரையில் வருவதை உணர்ந்து மக்கள் கூர்ந்து நோக்கினார்கள். வந்தவர்கள் நமது நபிதான். நானும் சப்தம் கேட்டுதான் போய் பார்த்துவிட்டு வருகிறேன். பயப்படுவதற்கு ஒன்றுமில்லை. எல்லோரும் நிம்மதியாக போய்ப் படுங்கள்'' என்றார்கள். மக்கள் பீதிவயப்பட்ட நேரத்திலும் அஞ்சாத வீரர். உஹது களத்தில் உமைய்யத் இப்னு கலஃப் என்பவன் நபியைக் கொல்ல வேகத்துடன் குதிரையில் வந்தபோது நபி அருகில் நின்றிருந்த ஒரு தோழரின் ஈட்டியை வாங்கி ஒரு குத்துமதிப்பாக விட்டார்கள் அவனைக் கொல்லவேண்டும் என்பது நபியின் பிரதானமான நோக்கமல்ல. குறிபார்த்து மெனக்கெட்டு வீசவில்லை. பாய்ந்து வருகிற அவனைத் தடுக்கவேண்டும் அவ்வளவுதான். மிகச் சாதாரணமாக வீசப்பட்ட அந்த ஈட்டி அவனது காது ஓரமாக உரசி ஒரு சின்ன காயத்தை உண்டாக்கிவிட்டுச் சென்றது. அவ்வளவுதான். சடாரென கீழே விழுந்து துடித்தான்; அலறினான் நண்பர்கள் கூட அவனை நையாண்டி செய்தனர்: ஒரு சின்ன காயத்திற்காகவா இப்படி அலறுகிறாய்? அவன் சொன்னான்: ''டே.. அடித்தது யார் தெரியுமா/? முஹம்மதின் அடி இது. சாதாரண அடி அல்ல; அவர் என்மீது எச்சில் துப்பினாலும் நான் அழிவது உறுதி'' இந்த அளவுக்கு வீரரான நபியவர்கள் குர் ஆனின் வசனங்களை ஓத ஆரம்பித்து விட்டால் குழந்தையைப் போல குலுங்கி குலுங்கி அழுவார்கள். மறுமையின் நிகழ்வுகளை ஓதினால் மயங்கி விழுந்துவிடுவார்கள். உமர் (ரலி) அவர்களைப் பற்றிக் கூறப்படுகிறது: வேற்று அரசர்களின் வாளுக்கு அஞ்சாதவர்கள் கூட உமரின் கைத்தடிக்கு அஞ்சுவார்கள்'' ''இவர் நடந்து வரும் தெருவில் இப்லீஸ் தலைவைத்துக்கூட படுக்கமாட்டான்'' என்று நபி சொல்வார்கள். அந்த உமர் (ரலி) குர் ஆனைக் கையில் ஏந்திவிட்டால் குழந்தையைப் போல குலுங்கி குலுங்கி அழுவார்கள். ''ஹாதா கலாமு ரப்பீ'' ''ஹாதா கலாமு ரப்பீ'' (இது என் இறைவனின் வார்த்தையல்லவா?) என்று கூறி குர் ஆனை நெஞ்சில் அணைத்து முத்தமிடுவார்கள். அல்லாமா இக்பால் அவர்கள் தினமும் குர் ஆன் ஓதுவது வழக்கம். ஒரு நாள் தந்தை மகனே குர் ஆன் ஓதும்போது அது உன்னிடம் உரையாடுவதாக எண்ணி ஓது. கவனத்துடன் மன ஓர்மையுடன் ஓது.'' அதற்கு பிறகு மகன் இக்பால் அவ்வாறே ஓத ஆரம்பித்தார். என்ன வியப்பு! அவர் ஓத தொடங்கிவிட்டால் உள்ளம் உருகி கண்ணீர் பெருகி ஓடுமாம். நாமெல்லாம் குர் ஆன் ஓதி முடித்தால் எடுத்து அலமாரியில் வைப்போம். ஆனால் அவர் அதை எடுத்து சிறிது நேரம் வெயிலில் வைப்பார். காரணம், அவரின் கண்ணீரில் தாளெல்லாம் நனைந்து போயிருக்கும். ஒரு தோழருக்கு குர்ஆனின் ஒரு வசனத்தால் இறையச்சம் அதிகமாகி உயிரே போய்விட்டது. அவர்தான் மிஸ்வர் இப்னு மஹ்ரமா (ரலி). يوم نحشر المتقين إلى الرحمن وفدا ونسوق المجرمين إلى جهنم وردا ''பக்தியாளர்களை ரஹ்மானின் பக்கம் அழைக்கப்படும் பாவிகளை தரதரவென நரகிற்கு இழுக்கப்படும்'' இந்த வசனத்தை உணர்ந்த மறுவினாடி அலறினார்: அய்யோ நான் இறையச்சமுள்ளவனா? பாவியா? நான் மறுமையில் அழைக்கப் படுவேனா அல்லது இழுக்கப்படுவேனா தெரியவில்லையே என்று கதறி மூர்ச்சையாகி விழுந்தார்; உயிரும் பிரிந்தது. தாவூது (அலை) ஒரு சின்ன சருகல்/ தவறுக்காக 40 நாட்கள் தொடர்ந்து அழுதார்கள். அவர்களின் கண்ணீரில் புற்கள் முளைத்துவிட்டன. ஒரு சமயம் அவர்கள் 40000 மக்கள் கூடியிருந்த கூட்டத்தில் நரகத்தைப் பற்றி உருக்கமாக பயான் செய்தார்கள்; அவர்கள் சொன்ன விதத்தில் 30000 பேர் அங்கேயே இறந்தனர் (۔ احياء) நபி (சல்) ஒருமுறை ஜிப்ரீலிடம் கேட்டார்கள்: என்ன ஜிப்ரீலே! மற்ற மலக்குகளைவிட வித்தியாசமாக மீக்காயீலை நான் பார்க்கிறேனே. அவர் சிரித்து நான் பார்க்கவில்லையே? என்ன காரணம்? ஜிப்ரீல்(அலை)கூறினார்கள்: என்றைக்கு நரகம் படைக்கப்பட்டு அதை அவர் பார்த்தாரோ அன்றிலிருந்து அவர் சிரிப்பைத் தொலைத்தார்.'' பொதுவாக சஹாபாக்கள் நல்லடியார்கள் அனைவரிடமும் இந்த அம்சம் இருந்தது என்பதைக் கீழே காணலாம் ومن أخلاقهم رضي الله تعالى عنهم كثرة خوفهم من الله تعالى إذا ذكروا أهوال يوم القيامة وكثرة الغشيان و الصعق إذا سمعوا القرآن و الذكر وقد قرأ رسول الله صلى الله عليه وسلم يوما قوله تعالى( إن لدينا أنكالاً وجحيماً وطعاماً ذا غصة وعذابا أليماً )وكان وراءَه حُمران بن أَعيَن فخرّ ميتا رضي الله عنه . وقد دخل يزيد الرقاشي على عمر بن عبد العزيز رحمهما الله تعالى يوما.فقال له عضني يا يزيد فقال له يا أمير المؤمنين إنك أول خليفة يموت فبكى عمر وقال له زدني فقال له ليس بينك وبين أبيك آدم أبٌ حيّ فبكى عمر وقال له زدني فقال له ليس بين الجّنة و النّارمنزلة أخرى فسقط عمر مغشياً عليه وكان الحسن بن صالح رحمهالله تعالى يؤذن مرة فقال أشهد أن لا إله إلا الله فغُشي عليه فحملوه من المنارة ونزلوا به وصَعد أخوه فأذن وصلى بالناس و الحسن في غشيته وكان أبو سليمان الداراني رحمه الله تعالى يقول ''ما رايت أحداً أكثرُ خشوعاً من الحسن قام ليلةً ُ إلى الصباح بسورة( عمَّ يتساءلون (يرددها و يغشى عليه إلى الفجر ولم يتم السورة وكان كلما غشي عليه يجدد الطهارة وقد مرَّ داود الطائي يوماً علىامرإة تبكي على قبر لها وتقول ليت شعري بأي, خَدًّيكَ بدأ الدود !!فخرّ داود مغشياً عليه وقد كانت شعوانة العابدة رحمة الله عليها تقول في مناجاتها ''الهي أنت أكرم الكرماء وسيد السادات ورجاء المسلمين فأسألك أن تغفر اليوم لكل من تعرض لمعصيتك بعد معرفته بعقوبتك ثم تصرخ ويغشى عليها وتقول هاه وقد قرأ أمير المؤمنين عمر بن الخطاب رضي الله عنه يوماً( إذا الشمس كورت حتى بلغ قوله تعالى وإذا الصحف نشرت) فخر مغشياً عليه وصار يضطرب على الأرض حين من الزمن قال وسمع الربيع بن خيثم رحمه الله تعالى قارئاً يقرأ )إِذَا رَأَتْهُم مِّن مَّكَانٍ بَعِيدٍ سَمِعُوا لَهَا تَغَيُّظاً وَزَفِيراً) فخر مغشياً عليه ثم حمل إلى بيته ففاته الظهر والعصروالمغرب والعشاء وكان هوالإمام في حارته وفي رواية كان القارئ عبد الله بن مسعود وقد كان أبو سليمان الداراني رحمه الله تعالى يقول صلى سفيان الثوري رحمه الله تعالى ركعتين خلف المقامثم نظر إلى السماء فانقلب مغشياً عليه قال الداراني وما فعل به ذلك مجرد نظره إلى السماء وإنما ذلك من التفكر في أهوال القيامة وكان وهب بن منبه رحمة الله عليه يقول كان إبراهيم الخليل عليه الصلاة والسلام إذا ذكر خطيئته يغشى عليه ويسمع أنين قلبه من مسيرة ميل فيقال له تفعل ذلك وأنت خليل الرحمن ؟ فيقول إذا ذكرت خطيئتي نسيت خلتي وصلى الفضيل بن عياض رحمه الله تعالى الفجر يوماً وقرأ (يس) فلما بلغ قوله تعالى (إِن كَانَتْ إِلَّا صَيْحَةً وَاحِدَةً فَإِذَا هُمْ جَمِيعٌ لَّدَيْنَا مُحْضَرُونَ) فسقط ابنه علّي رحمه الله تعالى فلم يفق حتى طلعت الشمس وقد كان علي إذا أراد أن يقرأ سورة لم يقدر أن يتمها وكان لا يقدر أن يسمع سورة (إِذَا زُلْزِلَتِ الْأَرْضُ زِلْزَالَهَا) ولا سورة القارعة أبداً ولما مات ضحك أبوه الفضيل فقيل له في ذلك وكان كثير الحزن فقال إن الله أحب موته فأحببت ذلك لحب الله وكان علّي يقول لأبيه ادع الله لي أن يقدرني على سماع سورة كاملة أو على ختم القرآن ولو مرة قبل موتي كان أحدهم يقرأ القرآن في الليل فإذا أصبح عرف الناس ذلك في وجهه من شدة التغير والإصفرار والذبول فصار الناس اليوم يقرأ أحدهم القرآن كله في الليل فإذا أصبح لا يظهر على وجهه منه شيْ وكان ميمون بن مهران رحمه الله تعالى يقول سمع سليمان الفارسي رضي الله عنه قارئاً يقرأ قوله تعالى(وإن جهنم لموعدهم أجمعين (فصاح ووضع يده على رأسه وخرج هائماً لايدري أين يتوجه مدة ثلاثة أيام உண்மையான மூமின் யார்-2 அல்லாஹ்வின் அத்தாட்சிகள் காண்பிக்கப்பட்டால் வசனங்கள் ஓதிக் கான்பிக்கப்பட்டால் ஈமான் அதிகரிக்கும் உள்ளத்தில் மாற்றம் உண்டாகும் ஜைனுல் ஆபிதீன் (ரஹ்) அவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள் அடிமைப் பெண் பரிமாறிகொண்டிருந்தாள். கையில் வைத்திருந்த சால்னா தவறி விழுந்து அன்னாரின் ஆடையில் பட்டு அசிங்கப்படுத்திவிட்டது. அவர்களின் கோபம் அதிகரித்து முகம் சிவந்தபோது அவள் உடனே சுதாரித்துக்கொண்டு ஆயத்தை ஓதினாள் நல்லவர்கள் கோபத்தை மென்று விழுங்குவார்கள் இந்த வசனத்தைக் கேட்டவுடனே கோபம் மாறியது அடுத்த வாசகத்தை ஓதினாள் மக்களை மன்னித்துவிடுவார்கள் நான் உன்னை மன்னித்துவிட்டேன் என்றார்கள் அவள் தொடர்ந்து ஓதினாள் அல்லாஹ் உபகாரம் செய்வோரை விரும்புகிறான் அப்படியா நான் உன்னை உரிமையிட்டுவிட்டேன் என்றார்கள். இப்ராஹீம் இப்னு அத்ஹம் (ரஹ்) மன்னராக இருந்த சமயம் காட்டுக்கு வேட்டைக்கு சென்றிருந்தார்கள். அரன்மனையின் பணிப்பெண் அறையைப் பெருக்கி சுத்தம் செய்துவிட்டு அங்கிருடந்த மன்னரின் பஞ்சணையில் படுத்துப் பார்க்கலாமே என்று சற்றுப் படுத்தாள். அது கொடுத்த சொகுசில் சுகமாக தன்னை மறந்து தூங்கிவிட்டாள். மன்னர் வந்து பார்த்து கோபம் கொண்டு சாட்டையடி கொடுக்க உத்தரவிட்டார். அவள்சிரித்தாள். ஏன் சிரிக்கிறாய்?'' என்று கேட்டார். மன்னா. உங்களை நினைத்துத்தான் சிரிக்கிறேன் என்றாள். என்னை நினைத்தா? ஆமாம் மன்னா. ஒரு தடவை இந்த மஞ்சத்தில் படுத்ததற்காக எனக்கு சாட்டையடி என்றால் பல வருடங்களாக இதில் நீங்கள் படுத்திருக்கிறீர்களே அல்லாஹ் உங்களை எத்தனை முறை சாட்டையால் அடிப்பானோ என்று நினைத்தேன் என்றாள் இதைக் கேட்ட மன்னர் அதிர்ந்தார் உன்னை மன்னித்தேன் என்றார். சிந்திக்க ஆரம்பித்தார். இதுதான் அவர் அரண்மனை வாழ்க்கையை உள்ளத்திலிருந்து உதறுவதற்கு முதல் தூண்டுகோலாய் அமைந்தது. ஃபுழைல் இப்னு இயாழ் ரலி ஆரம்பத்தில் ஒரு திருடர். ஒரு நாள் இரவு ஒரு வீட்டில் திருடுவதற்காக கூரையில் ஏறி கூரையைப் பிரித்து உள்ளே இறங்க முனைந்த பொழுது உள்ளிருந்து ஒரு குரல் கேட்டது. குர்ஆன் ஓதும் குரல். அல்லாஹ்வின் நினைவால் உள்ளங்கள் நடுங்கும் நேரம் இன்னும் வரவில்லையா?'' அவ்வளவுதான் பதறினார் இறங்கி கதறினார். ஓடினார் பாவமன்னிப்பு தேடினார். அதன்பிறகு ஒரு பெரும் இறைநேசராக வாழ்ந்து மறைந்தார் என்பது வரலாறு. மக்காவில் இஸ்லாம் பரவிக்கொண்டிருந்த ஆரம்பக் காலக் கட்டம். மக்காவுக்கு ஒரு வியாபாரி வந்தார். மக்கத்து குரைஷிகள் அவரைத் தடுத்து சொன்னார்கள்: நீங்கள் மக்காவுக்குள்ளே செல்லவேண்டாம். காரணம், அங்கே முஹம்மது என்பவர் புதிய மார்க்கத்தைப் பரப்புகிறார். அவர் ஓதுகிற குர்ஆனிய வசனங்களை நீங்கள் கேட்டால் உடனே மதம் மாறிவிடுவீர்களோ என்று நாங்கள் அஞ்சுகிறோம்’’ அவர் மக்காவுக்குள் செல்லவில்லை. ஆனாலும் ஊருக்குத் திரும்புகிறபோது ஒருமுறையாவது கஃபாவை தவாஃப் செய்துவிட்டுச் செல்லலாமே என்று நினைத்தார். அதனாலே அவர் உள்ளே செல்லும்போது குர்ஆனின் வசனங்கள் காதுக்குள் விழுந்துவிடக்கூடாது என்று காதுகளில் பஞ்சை வைத்து அடைத்துக்கொண்டு மக்காவிற்குள் சென்றார். செல்லும் வழியில் கால் தடுக்கி தடுமாறியபொழுது காதிலிருந்த பஞ்சு கீழே விழுந்த சில வினாடிகள் நபியவர்கள் ஓதிய குர்ஆனின் வசனங்கள் அவர் காதுகளில் விழ அந்த வினாடியே உள்ளம் நடுங்கி ''சத்தியமாக இது இறைவனின் வார்த்தைகளே'' என்று கூறி இஸ்லாமைத் தழுவுகிறார். முஹம்மதின் தலையை தரையில் வீழ்த்தாதவரை என் வாள் உரையில் போகாது'' என்று வீரமுழக்கம் செய்து புறப்படுகிறார்கள் உமர். ஒரு மந்திர மாற்றம் நடக்கிறது. அவர்களின் சகோதரி ஓதிய ஒரு வசனத்தைக் கேட்டதின் விளைவால் அந்த மாற்றம் ஏற்பட்டு நபியிடம் சென்று கலிமா சொல்லி நபியின் பெரும் ஆதரவாளராக திரும்புகிறார்கள். மாநபி (சல்) மறைந்துவிட்ட செய்தி அறிந்து மதீனமாநகரமே அல்லோல கல்லோலப்பட்டது அனைவரும் அறிந்த ஒன்று. அந்த நேரம் அதிர்ச்சி தாங்க முடியாமல் மயக்கமாகி விழுந்தவர்கள் பலர். பைத்தியமாகி பரிதவித்தவர் பலர்; ஏன்.. மதம் மாறி மீண்டும் பழைய மதத்திற்கே ஓடியவரும் உண்டு. உமர் (ரலி) கையில் வாளை உயர்த்திப் பிடித்துக்கொண்டு நபி இறந்துவிட்டதாக யாராவது சொன்னால் தலை இருக்காது என்று உணர்ச்சியின் உச்சியில் இருந்த உச்சக்கட்டமான நேரம் அது. யாருக்கு யார் ஆறுதல் சொல்வது? யார் யாரைத் தேற்றுவது? என்று யாருக்குமே புரிபடாத சூழலில் ஒரே ஒரு வசனம் அபூபக்கர் (ரலி) அவர்களால் ஓதிக்காண்பிக்கப்பட்ட மறுவிநாடி உமரின் கையில் ஓங்கிப் பிடித்திருந்த வாள் தானாகவே கீழே விழுந்தது; துயரத்தின் உச்சத்தில் இருந்த மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பினார்கள். அல்லோலகல்லோலப்பட்ட மதீனா அமைதியானது; பல உயிர்கள் பலியாவதிலிருந்து தடுக்கப்பட்டது உமர்(ரலி) அவர்களின் ஆட்சி காலத்தில் மஹர்த் தொகை அளவுகடந்து போனதால் பல ஏழைத் தோழர்கள் மஹர் கொடுக்கமுடியாமல் திணறியபொழுது, ஜனாதிபதி அவர்கள் மஹருக்கான ஒரு வரம்பை நிர்ணயித்து அறிவித்தார்கள். சபையில் இருந்த ஒரு பெண் இதை ஆட்சேபித்தார். பெண்களுக்கான மஹரை குவியல் குவியலாக கொடுக்க அல்லாஹ் கூறியிருக்கும்போது அதற்கு அளவு நிர்ணயம் செய்யலாமா?'' இந்த வசனத்தைக் கேட்ட மாத்திரத்தில் நல்லவேளை தக்க சமயத்தில் இந்த வசனத்தை நினைவூட்டினீர். இல்லையெனில் இந்த உமர் நாசமாகியிருப்பேன்'' என்று தன் சட்டத்தை திரும்ப பெற்றுக்கொண்டார்கள். பொதுவாக அருமைத் தோழர்கள் எல்லோருமே இப்படித்தான். அவர்கள் எந்நிலையிலிருந்தாலும் கோபத்தின் கொந்தளிப்பிலிருந்தாலும் உணர்ச்சியின் உச்சியிலிருந்தாலும் பாசத்தின் பரிதவிப்பிலிருந்தாலும் வெறுப்பின் வேதனையிலிருந்தாலும் குர்ஆனின் வசனங்கள் ஓதிக்காண்பிக்கப்பட்டால் அவர்களின் உள்ளங்களில் பெரும் மாற்றமும் ஈமானில் பிரகாசமும் உண்டானதை வரலாற்று நெடுகிலும் பார்க்கிறோம். உண்மையான மூமின் யார்-3 வ அலா ரப்பிஹிம் யதவக்கலூன் இறைவனின் மீதே முழுமையாக நம்பிக்கை வைப்பார்கள் • அவன்மீது நம்பிக்கை வைப்பவர்களை அவன் கைவிடுவதில்லை நபி (சல்) அவர்கள் ஒரு நிகழ்ச்சியை சுட்டிக்காட்டினார்கள்: முன்வாழ்ந்த ஒரு சமுதாயத்தில் ஒருவருக்கு கடன் தேவைப்பட்டது. அவர் இன்னொரு செல்வந்தரிடம் கடன் கேட்டார் அவர் தருகிறேன் ஆனால் சாட்சிக்கு யாரையாவது அழைத்து வாரும்'' என்றார். அல்லாஹ்வே சாட்சியாக இருக்கப் போதும்.'' என்றார் அவர். ‘’சரி.. ஜாமீன் ஏற்க யாரையாவது அழைத்து வாரும்'' என்றார். அல்லாஹ்வே ஜாமீனாக இருக்கப் போதும்.'' என்றார் அவர். ‘’சரி நான் அல்லாஹ்வை நம்புகிறேன்’’ என்று கூறி ஆயிரம் பொற்காசுகளை கடன் கொடுத்தார். அவர் அதை வாங்கிக் கொண்டு கடல் பிரயாணம் செய்து தேவையான பொருளீட்டுக்கொண்டு குறிப்பிட்ட தவனைக்குள் திரும்பிவிட கப்பலைத் தேடினார் ஒரு கப்பலும் கிடைக்கவில்லை. எனவே அவர் ஒரு மரக்கட்டையை எடுத்து அதில் துளையிட்டு அதற்குள் ஆயிரம் பொற்காசுகளையும் அதற்குரியவருக்கு ஒரு கடிதமும் எழுதி வைத்து பின்னர் அந்த இடத்தை ஒழுங்காக மூடி மறைத்துவிட்டு கடலோரமாக அதைக் கொண்டுவந்து ''இறைவனே நான் இன்னாரிடம் ஆயிரம் பொற்காசுகளை கடன் கேட்டதற்கு அவர் சாட்சி கோரினார்; நான் உன்னையே சாட்சியாக்கினேன் அவரும் அதை ஏற்றுக்கொண்டார். அவர் என்னிடம் ஜாமீன் கோரினார் நான் அல்லாஹ்வே ஜாமீன் என்றேன் அதையும் ஏற்றுகொண்டார். அவர் சொன்ன தவனைக்குள் கடனை அடைத்துவிட நான் பயணத்திற்கு கப்பலைத் தேடினேன் கிடைக்கவில்லை. எனவே இந்த பணம் உள்ள மரக்கட்டையை உன் பாதுகாப்பில் அனுப்புகிறேன் அவரிடம் சேர்த்துவிடு'' என்று துஆ செய்து கடலில் அனுப்பினார். மறுகரையில் கடன் கொடுத்தவர் தவணை முடிந்ததும் தன் கடன்பொருள் ஏதும் கப்பலில் வந்திருக்கக் கூடும் என்று பார்ப்பதற்காக தம் ஊர் கடற்கரையோரமாக வந்து பார்த்தார் .அப்பொழுது திடீரென ஒரு மரக்கட்டை மிதந்து வருவதைக் கண்டார். விறகாகப் பயன்படும் என்று அதை எடுத்துக் கொண்டு வந்து உடைத்துப் பார்த்தபொழுது உள்ளே பணத்தையும் கடிதத்தையும் கண்டார். கடன் வாங்கியவருக்கு பின்னர் ஒரு கப்பல் கிடைத்து அவர் வந்து இன்னொரு ஆயிரம் பொற்காசுகளை எடுத்துவந்தார். நான் கடலில் அனுப்பிய காசு கிடைத்ததா இல்லையா என்று தெரியவில்லை. எனவே இதைப் பிடியுங்கள்'' என்றார். ''இல்லை நீர் அனுப்பியதை அல்லாஹ் என்னிடம் பத்திரமாக சேர்த்துவிட்டான்'' என்றார் அவர். (புஹாரி) எனது உம்மத்தில் எழுபதாயிரம் பேர் விசாரணையின்றி சொர்க்கம் செல்வார்கள் என்று நபி அறிவித்தபோது அது யாராக இருக்கும் என்று பல கருத்துகள் தோழர்களுக்குள் நிலவியது. இறுதியில் நபியவர்களே வந்து அதற்கு விளக்கம் தந்தார்கள்: ''அவர்கள் மந்திரிக்கமாட்டார்கள்; சகுனம் பார்க்கமாட்டார்கள்; இறைவனின் மீதே முழுமையாக நம்பிக்கை வைப்பார்கள்'' ''யாரசூலல்லாஹ்! என்னையும் அந்த கூட்டத்தில் சேர்க்க அல்லாஹ்விடம் துஆ செய்யுங்கள்'' என்று உக்காஷா (ரலி) வேண்டினார்கள். நபி துஆ செய்தார்கள். இன்னொரு தோழரும் வேண்டிக்கொள்ள, ''உக்காஷா இந்த விஷயத்தில் முந்திக்கொண்டார்.'' என்று நபி கூறினார்கள். இப்படி எல்லா தோழர்களும் ஆவல் கொண்ட அருமையான இந்த பாக்கியத்திற்கு தகுதி உள்ளவர்கள் யார் தெரியுமா? இறைவனின் மீதே முழுமையாக நம்பிக்கை வைப்பவர்கள்தான். முதலில் வயிற்று வலி வந்தபொழுது அல்லாஹ்விடம் கேட்டு மூலிகையை பெற்று வயிற்று வலி குணமானதும் பின்னர் மற்றொருமுறை வயிற்று வலி வந்தபொழுது அல்லாஹ்விடம் கேட்காமல் நேரடியாக மூலிகையை நாடியபொழுது குணமாகவில்லை - அறிந்த சம்பவம். ஜக்கரிய்யா (அலை) அவர்களை எதிரிகள் துரத்திவந்தபொழுது அல்லாஹ்விடம் உதவி தேடாமல் மரமே என்னை ஒழித்து வைத்துக்கொள் என்று கூறியதால் அவர்களுக்கு ஏற்பட்ட பரிதாப முடிவு நமக்கு ஒரு படிப்பினை. நபிமார்களின் நம்பிக்கையை குறைகாணும் அளவுக்கு நமக்கு தகுதி அறவே இல்லை எனினும் நமது படிப்பினைக்காக அல்லாஹ்வே இப்படி அவர்களது வாழ்வில் சில நிகழ்வுகளை ஏற்படுத்துகிறான். உண்மையான மூமின் யார்-4 தொழுகையை நிலை நிறுத்துவார்கள் தொழுவார்கள் என்று கூறவில்லை ; தொழுகையை நிலை நிறுத்துவார்கள். அதாவது விட்டு விட்டு தொழமாட்டார்கள் பொடுபோக்காக தொழமாட்டார்கள்; மன ஓர்மையின்றி கவனக்குறைவாக தொழமாட்டார்கள் அவர்கள்தான் உண்மையான மூமின் என்பதை இன்னொரு வசனமும் உறுதிப்படுத்துகிறது கத் அஃப்லஹல் மூமினூன் அல்லதீனஹும் ஃபீ சலாத்திஹிம் க்ஹாஷிவூன் சாதாரண ஒரு தலைவலிக்காக தொழுகையை விட்டுவிடுபவர்கள் நம்மில் உண்டு. உண்மையான மூமின்கள் உடலில் உயிர் ஓடிக்கொண்டிருக்கும் காலமெல்லாம் தொழுகையை விடத் துணியமாட்டார்கள். நபி (சல்) மரணப்படுக்கையில் அடிக்கடி மயக்கம் வந்து அல்லல் பட்டுக் கொண்டிருந்த நிலையிலும் கடும் காய்ச்சலினால் அவதிப்பட்டுக் கொண்டிருந்த நிலையிலும் தொழுவதற்கு துடித்துக்கொண்டிருந்தார்கள். இரண்டு தோழர்களின் தோள்களில் கையைப் போட்டுக்கொண்டு தத்தி தத்தி நடந்து வந்து அபூபக்கர் (ரலி) ஜமாஅத் நடத்திக்கொண்டிருந்த தொழுகையில் கலந்து தொழுத நிகழ்வைப் படிக்கும் போதெல்லாம் கண்கள் கலங்குகின்றனவே. பாச நபியின் பயிற்சிப் பாசறையில் பாடம் படித்து பக்குவம் பெற்ற பண்பிற்குரிய தோழர்கள் மாத்திரம் தொழுகையில் சளைத்தவர்களா என்ன? உமர் (ரலி) அவர்கள் தொழுகை நடத்த தயாரானபொழுது வஞ்சகன் ஒருவன் குருவாளை எடுத்து குத்திவிட்டான் மயங்கிச் சரிகின்றார்கள். மயக்கம் தெளிந்து எழுந்தவுடன் கூறிய முதல் வார்த்தை ''தொழுகை'' குடலில் குத்து விழுந்து கிழிந்துவிட்டதால் கொடுக்கப்பட்ட மருந்துகளெல்லாம் குடலில் தங்காமல் கீழே விழுந்து நிலைமையை இன்னும் மோசமாக்கிக் கொண்டிருக்க உயிர் ஊசலாடிக்கொண்டிருந்த அந்த இக்கட்டான நேரத்திலும் தொழுகை தொழுகை'' என்று துடித்துக்கொண்டிருந்தார்கள். இந்த நிலையிலும் இப்படி துடிக்கவேண்டுமா? என்று மற்றவர்கள் வினவியதற்கு, ''தொழாதவனுக்கு இஸ்லாத்தில் என்ன பங்கு இருக்கிறது? என்றார்கள் ஈமானுக்கும் குஃப்ருக்கும் அடிப்படை வித்தியாசமே தொழுகைதான் என்று ஏந்தல் பெருமானார் (ஸல்) கூறியுள்ளார்கள். அவ்ரங்கசீப்(ரஹ்) ஒரு அற்புதமான அரசர். அரசியலில் ஈடுபட்டுக்கொண்டே ஆன்மீகத்திலும் சிறந்து விளங்கிய ஒரு இறைநேசர். முகலாயப் படைகளும் புஹாரா மன்னரான அப்துல் அஸீஸின் படைகளும் பல்க் சமவெளியில் சந்தித்தன. முகலாயப் படைக்கு தளபதி அவ்ரங்கசீப் (ரஹ்). கடும் போர் மூண்டது. போரின் உச்சக்கட்டம். லுஹர் நேரம் வந்ததும் போர்க்களத்தின் நடுவே அவ்ரங்கசீப் யானையிலிருந்து கீழே இறங்கினார் உளூ செய்தார். விரிப்பு ஒன்றை தரையில் விரித்து அமைதியாக தொழ ஆரம்பித்தார். எதிரிப் படைத்தலைவர் ஆச்சரியத்துடன் பார்த்தார். இந்த நிலையிலும் ஒருவர் மனஓர்மையுடன் தொழமுடியுமா? ஒரு பக்கம் யானைகள் பிளிறிக்கொண்டிருக்கின்றன; குதிரைகள் கனைத்துக்கொண்டிருக்கின்றன; ஆட்கள் அங்குமிங்கும் பாய்ந்து துவம்சம் செய்துகொண்டிருக்கின்றனர்; வாட்கள் பளிச் பளிச் என மின்னிக்கொண்டிருக்கின்றன; இந்த நிலையிலும் ஒருவர் மனஓர்மையுடன் தொழமுடியும் என்றால் அவர் சாதாரண மனிதர் அல்ல; மனிதப்புனிதர். இப்படிப்பட்ட மகானுடனா நாம் மோதிக்கொண்டிருக்கிறோம் என்று உடனே சமாதனம் செய்துகொள்கிறார். போர் நிறுத்தப்படுகிறது. கடுமையான நிலையிலும் கடமையை மறக்காத அவ்ரங்கசீப் அவர்களின் உறுதியான ஈமானால் பல்லாயிரம் முஸ்லிம்களின் உயிர் பலியாகாமல் காப்பாற்றப்பட்டது. உண்மையான முஃமின் யார்-5 உண்மையான முஃமினின் ஐந்தாவது அம்சமாக அல்லாஹ் கூறுவது என்ன? ومما رزقناهم ينفقونஅவர்களுக்கு நாம் வழங்கிய செல்வத்திலிருந்து பிறருக்கும் தானம் வழங்குவார்கள் «ما منكم من أحدٍ إلا سيكلمه الله، ليس بينه وبينه ترجمان، فينظر أيمن منه فلا يرى إلا ما قدم، فينظر أشأم منه فلا يرى إلا ما قدم، فينظر بين يديه فلا يرى إلا النار تلقاء وجهه، فاتقوا النار ولو بشق تمرة நபி (சல்) கூறினார்கள்: மறுமையில் அல்லாஹ் உங்களில் ஒவ்வொருவரிடமும் எந்த மொழிபெயர்ப்பாளருமின்றி நேரடியாக பேசுவான் அப்பொழுது அடியான் தனது வலப்பக்கமும் இடப்பக்கமும் பார்ப்பான் அவன் செய்த நன்மை தீமைகள் அங்கு காண்பான். தன் முன்னால் பார்ப்பான் அங்கு நரகம் இருக்கும். எனவே பேரீத்தம்பழத்தின் சிறு துண்டையாவது தர்மம் செய்து நரகிலிருந்து விலகிக்கொள்ளுங்கள். (புஹாரி, முஸ்லிம்) பல பயன்கள்: தானம் அளிப்பதால் உண்மையான முஃமினின் ஐந்தாவது தகுதியை மட்டுமல்ல.. இன்னும் பல அபரிமிதமான பயன்களை அடைந்துகொள்ளலாம். 1. ரகசிய தர்மம் இறைவனின் சினத்தை அணைத்துவிடுகிறது: أنّها تطفىء غضب الله سبحانه وتعالى كما في قوله صلى الله عليه وسلم: «إن صدقة السر تطفىء غضب الرب تبارك وتعالى» [صحيح الترغيب]. 3. 2. பாவத்தை அழித்துவிடுகிறது: أنّها تمحو الخطيئة، وتذهب نارها كما في قوله صلى الله عليه وسلم: «والصدقة تطفىء الخطيئة كما تطفىء الماء النار» [صحيح الترغيب]. நபிசல் கூறினார்கள்: தண்ணீர் நெருப்பை அணைத்துவிடுவதுபோல தர்மம் பாவத்தை அழித்துவிடுகிறது. 3. நரக நெருப்பிலிருந்து பாதுக்காக்கிறது: أنّها وقاية من النار كما في قوله صلى الله عليه وسلم: «فاتقوا النّار، ولو بشق تمرة». பேரீத்தம்பழத்தின் சிறு துண்டையாவது தர்மம் செய்து நரகிலிருந்து விலகிக்கொள்ளுங்கள். (புஹாரி, முஸ்லிம்) 4. மஹ்ஷரில் நிழல் தருகிறது: أنّ المتصدق في ظل صدقته يوم القيامة كما في حديث عقبة بن عامر رضي الله عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: «كل امرىء في ظل صدقته، حتى يقضى بين الناس». قال يزيد: "فكان أبو مرثد لا يخطئه يوم إلا تصدق فيه بشيء ولو كعكة أو بصلة"، قد ذكر النبي صلى الله عليه وسلم أن من السبعة الذين يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله: «رجل تصدق بصدقة فأخفاها، حتى لا تعلم شماله ما تنفق يمينه» [في الصحيحين]. மறுமையில் மக்களெல்லாம் மஹ்ஷர் மைதானத்தின் வாட்டும் வெயிலில் வாடி வதங்கும்பொழுது கொடைவள்ளல் தனது தர்மத்தின் நிழலில் சொகுசாக நிம்மதியாக இருப்பார். 5. உடல் பிணிகளுக்கு கூட மருந்தாக அமைகிறதாம் தர்மம். أنّ في الصدقة دواء للأمراض البدنية كما في قوله صلى الله عليه وسلم: «داووا مرضاكم بالصدقة». ''உங்கள் வியாதிகளுக்கு தர்மத்தின் மூலம் சிகிச்சை செய்யுங்கள்'' பல வைத்தியம் பார்த்தும் பலனில்லாமல் கிணறு தோண்டி மக்களுக்கு தண்ணீரை தர்மம் செய்ததால் முட்டுக்காலில் நீண்ட நாட்களாக வடிந்துகொண்டிருந்த சீழ் நின்ற அற்புதமான வரலாறு يقول ابن شقيق: "سمعت ابن المبارك وسأله رجل: عن قرحةٍ خرجت في ركبته منذ سبع سنين، وقد عالجها بأنواع العلاج، وسأل الأطباء فلم ينتفع به، فقال: اذهب فأحفر بئرًا في مكان حاجة إلى الماء، فإني أرجو أن ينبع هناك عين ويمسك عنك الدم، ففعل الرجل فبرأ". [صحيح الترغيب]. 6. மனவியாதிகளுக்கும் மருந்து: إنّ فيها دواء للأمراض القلبية كما في قوله صلى الله عليه وسلم لمن شكى إليه قسوة قلبه: «إذا إردت تليين قلبك فأطعم المسكين، وامسح على رأس اليتيم» [رواه أحمد]. அல்லாஹ்வின் தூதரே.. என் உள்ளம் கடினமாக இருக்கிறது என்று முறையிட்ட தோழருக்கு நபி சொன்ன ஆலோசனை: உன் உள்ளத்தை மிருதுவாக்க நீர் நாடினால் ஏழைகளுக்கு உணவளியும்; அனாதையை ஆதரியும்! 7. தர்மம் தலைகாக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும். யஹ்யா அலை தன் சமுதாயத்திற்கு தந்த உபதேசங்களில் ஒன்று: ''தானதர்மம் தாராளமாக அளியுங்கள். ஏனெனில் அது உங்களை எல்லா ஆபத்துகளை விட்டும் காக்கும். இதற்கு உதாரணம்: உங்களில் ஒருவரை எதிரி பிடித்து சிறைவைத்தான்; பிறகு கழுத்துடன் கைகளைப் பிணைத்தான்; கழுவில் ஏற்றுவதற்காக அவன் முனைந்தபொழுது நீங்கள் சுதாரித்துக்கொண்டு ஏதேனும் ஒரு சில பொருளை பிணையாக கொடுத்து தப்பிவிட்டீர்கள். அதுபோல உங்களின் தர்மம் உங்களைத் தக்க தருணத்தில் காப்பாற்றுகின்ற பிணைத் தொகையாகும்.'' فالصدقة لها تأثير عجيب في دفع أنواع البلاء ولو كانت من فاجرٍ أو ظالمٍ بل من كافر فإنّ الله تعالى يدفع بها أنواعًا من البلاء، وهذا أمر معلوم عند النّاس خاصتهم وعامتهم وأهل الأرض مقرون به لأنّهم قد جربوه. ஃபிர்அவ்ன் ''தானே கடவுள்'' என்று கூறியதோடு மட்டுமல்லாமல் அனேக அட்டூழியங்களைப் புரிந்தவன். ஒரு கட்டத்திலே மூசா அலை அவர்களே, ''யா அல்லாஹ் இனியும் ஏன் அவனை விட்டுவைத்திருக்கிறாய்'' என்று பொறுமையிழந்து வினவியபொழுது அல்லாஹ் இப்படிக் கூறினானாம்: ''என்ன செய்வது நபியே.. அவன் ஒரு பக்கம் அநியாயம் புரிந்தாலும் மறுபக்கம் தான தர்மங்கள் தாராளமாக தருகிறான். அதனால் அவனை இன்னும் சிறிதுகாலத்திற்கு விட்டுவைத்திருக்கிறேன்'' அப்படியானால் தர்மம் தண்டனைகளைக் கூட தாமதப்படுத்துகிறது அல்லவா? ஒரு விறகுவெட்டி தலையில் விறகுச் சுமையுடன் வீடு திரும்பிக்கொண்டிருந்தான். வரும் வழியில் எதிரில் ஒரு துறவிம்வருவதைப் பார்த்தான். அவருக்கு வழி விடுவதற்காக பாதையின் ஓரத்தில் ஒதுங்கி நின்றான். ஆனால் அவரோ திடீரென, ''விறகு சுமையை உடனே கீழே எறி'' என்றார். அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை. காலையிலிருந்து கஷ்டப்பட்டு வெட்டிக்கொண்டு வந்த விறகுகள் அவை. அவற்றை விற்றால்தான் அன்று அவனுக்கு உணவு. அந்த கட்டை எறியச் சொல்லுகிறாரே? இருந்தாலும் அவர்மீதுள்ள மரியாதைக்காக விறகுக்கட்டை கீழே போட்டான். போட்ட வேகத்தில் கயிறு அறுந்து விறகுகள் சிதறின. அதற்குள்ளே இருந்து ஒரு கருநாகம் நெளிந்து ஓடியது. விறகுவெட்டி வியப்பாலும் அச்சத்தாலும் உறைந்து நின்றுவிட்டான். உடனே சுதாரித்துக்கொண்டு ''அய்யா. நீங்கள் எனது உயிரைக் காப்பாற்றினீர்கள்'' என்றான். ''உன்னைக் காப்பாற்றியது நான் அல்ல; நீ செய்த தர்மம். இன்று ஏதாவது தர்மம் செய்தாயா?'' என்று கேட்டார் துறவி. ''நான் பரம ஏழை. விறகுவெட்டிப் பிழைப்பவன். தர்மம் செய்யும் சக்தி எனக்கு ஏது? என்றான். ''நன்றாக யோசித்துப் பார்''. அவன் சிறிதுநேரம் சிந்தித்துப் பார்த்தான். அவனுக்கு நினைவுக்கு வந்துவிட்டது ''ஆமாம் அய்யா! இன்று பகல் விறகு வெட்டிக் களைத்துப் போய் ஒரு மரத்தடியில் அமர்ந்தேன். கடுமையான பசி. கேழ்வரகு கூழ் கொஞ்சம் கொண்டு வந்திருந்தேன் அதை அருந்த நினைக்கும்போது அங்கே ஒரு பயணி வந்தார். ''நான் இரண்டு நாளாக பட்டினி. எனக்கு ஏதாவது சாப்பிடக் கொடுங்கள்'' என்றார். நான் என் கூழில் பாதியை அவருக்கு கொடுத்தேன். இதுதான் நான் செய்தது. இது என்னை மரணத்திலிருந்து காப்பாற்றுகிற அளவுக்கு பெரிய தர்மமா? ஆச்சரியமாக இருக்கிறதே'' என்றான். துறவி, '' இன்று நீ பாம்பு கடித்து இறந்து போகக்கூடியவன். நீ செய்த தர்மம் உன்னைக் காப்பாற்றியது'' என்றார். விறகு வெட்டி கொடுத்தது கொஞ்சம் கூழ்தானே. அது ஒரு பெரிய தர்மமா என்று கேட்கலாம். அவன் என்ன கொடுத்தான் என்பது முக்கியமல்ல. யாருக்கு.. எந்த நேரத்தில் கொடுத்தான் என்பதுதான் முக்கியம். பயணி இரண்டு நாள் பட்டினி என்று சொன்னான் விறகு வெட்டிகூழ் கொடுத்திராவிட்டால் ஒருவேளை அவன் இறந்துபோயிருக்கலாம். எனவே பயணிக்கு விறகு வெட்டி கொடுத்தது கூழ் அல்ல; உயிர். அவன் ஒரு உயிரைக் காப்பாற்றினான். அந்த தர்மம் அவனின் உயிரைக் காப்பாற்றிவிட்டது. ஆம். விதியையே மாற்றக்கூடிய வல்லமை தர்மத்திற்கு உண்டு அதனால்தான் திருவள்ளுவர் உயிருக்கு நன்மை தருவது அறத்தைவிட வேறு எது? என்கிறார் சிறப்பு ஈனும் செல்வமும் ஈனும் அறத்தின் ஊங்குஆக்கம் எவனோ உயிர்க்கு. 8. இறைவனின் திருப்பொருத்தம் கிடைக்கிறது: மறுமை நாளில் அல்லாஹ் ஒரு அடியானை அழைத்து கேட்பான்; நான் உன் வீட்டுவாசலில் வந்து உணவு கேட்டேனே நீ ஏன் தரவில்லை? அடியான், ''யா அல்லாஹ். உனக்கு பசி என்பது இல்லை; அப்படி இருக்க நீ வந்து என்னிடம் உணவு கேட்டாயா? என்ன இது வியப்பாக உள்ளதே '' ஆமாம் அன்றொருநாள் ஒரு யாசகன் உன் வீட்டுவாசலில் வந்து உணவு கேட்டான் நீ தரவில்லை. நீ அங்கு வந்து உணவு தந்திருந்தால் அந்த ஏழையிடம் என்னைக் கண்டிருப்பாய். சரி மற்றொருநாள் உன்னிடம் தண்ணீர் கேட்டேனே ஏன் தரவில்லை"? யா அல்லாஹ் உனக்கு தாகம் என்பதே இல்லையே நீ என்னிடம் தண்ணீர் கேட்டாயா?'' ஆமாம் அன்றொருநாள் ஒரு யாசகன் உன் வீட்டுவாசலில் வந்து தண்ணீர் கேட்டான் நீ தரவில்லை. நீ அங்கு வந்து தண்ணீர் தந்திருந்தால் அந்த ஏழையிடம் என்னைக் கண்டிருப்பாய்........இப்படியே அந்த ஹதீஸ் தொடருகிறது. ஆக, ஏழைக்கு தரும் கொடையை தனக்குத் தருவதாக அல்லாஹ் ஏற்றுக்கொள்கிறான். ஒரு அரசன் சிவபக்தன். ஒரு சமயம் கடவுளுக்கு பிரமாண்டமான பாலாபிஷேகம் செய்ய நினைத்தான். நாடு முழுதும் உத்தரவு போட்டான். இன்று எல்லோரும் பால் கறந்து கொண்டு வந்து அரண்மனையில் உள்ள இந்த பெரிய அண்டாவில் ஊற்றவேண்டும். யாரும் அருந்தவோ விற்கவோ கூடாது. மொத்தப் பாலையும் கடவுளுக்கே அற்பணிக்கவேண்டும் என்ற கடும் கட்டளை. மக்கள் சாரைசாரையாக கொண்டு வந்து ஊற்றினர். நிரம்பவே இல்லை. இறுதியாக ஒரு பெண்மணி ஒரு சிறிய செம்பில் கொண்டு வந்து ஊற்றினாள். உடனே நிரம்பி வழிந்தது மன்னன் வியப்புடன் கேட்டான்: மக்கள் அத்தனை பேரும் குடம் குடமாக அண்டா அண்டாவாக கொண்டுவந்து ஊற்றியும் நிரம்பாத இந்த பாத்திரம் நீ கொண்டு வந்த ஒரு சிறிய பாத்திரப் பாலை ஊற்றியதும் எப்படியம்மா நிரம்பியது? அவள் தயக்கத்தோடு கூறினாள்: மன்னா.. நீங்கள் என்னை மன்னிப்பதாக இருந்தால் அந்த ரகசியத்தை கூறுகிறேன்'' ''சரி மன்னித்துவிட்டேன். சொல்.. அந்த ரகசியம் என்ன? '' மன்னா. நான் தங்களின் ஆணைப்படி பாலைக் கறந்து முழுவதையும் இங்குதான் கொண்டுவந்து கொண்டிருந்தேன். குடிக்கவுமில்லை; விற்கவுமில்லை. வரும் வழியில் சில ஏழைக் குழந்தைகள் பசியில் துடித்துக் கொண்டிருந்த அலறலைக் கேட்டேன். என்னால் தாங்கமுடியவில்லை. ஒருபுறம் தங்களின் ஆணை. மறுபுறம் அந்த குழந்தைகளின் கொடூரமான பசி. உடனே அந்த குழந்தைகளுக்கு கொஞ்சம் பால் கொடுத்து பசியைத் தணித்துவிட்டு மீதியைத்தான் இங்கு கொண்டுவந்து ஊற்றினேன்.'' என்றாள். மன்னன் உணர்ந்தான்; மக்கள் உணர்ந்தனர்: பாலாபிஷேகம் என்ற பெயரில் பாலை கீழே கொட்டி வீணாக்குவதை விட கடவுளின் பெயரால் ஏழைகளுக்கு வழங்குவதே இறைவனைத் திருப்திப்படுத்தும் என்று. ''ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்'' 9. அல்லாஹ்வின் பாதையில் தனக்கு விருப்பமானவற்றை தானம் செய்யும்பொழுதுதான் பரிபூரண நன்மை கிடைக்கிறது: أنّ العبد إنّما يصل حقيقة البر بالصدقة كما جاء في قوله تعالى: {لَن تَنَالُواْ الْبِرَّ حَتَّى تُنفِقُواْ مِمَّا تُحِبُّونَ} [سورة آل عمران: 92]. 10. கொடுக்க கொடுக்க பெருகுகிறது: أنّ صاحب الصدقة يبارك له في ماله كما أخبر النبي صلى الله عليه وسلم عن ذلك بقوله: «ما نقصت صدقة من مال» [في صحيح مسلم]. இறைக்கிற கிணறு ஊறும் இறைக்காத கிணறு நாறும் ஒரு பெரியவர் தர்மப் பிரபுவாக வாழ்ந்தார். ஒருநாள் தன் மனைவியிடம் ''யார் வந்து யாசகம் கேட்டாலும் தாராளமாக கொடு'' என்று சொல்லிவிட்டு சென்றார். மனைவியும் தாராளமாக தானம் செய்தார். பிறகு கணவர் வீட்டுக்கு வந்தார். சிறிது நேரத்தில் ஒரு வண்டி நிறைய தானிய மூட்டைகள் வந்து இறங்கின. இதுவெல்லாம் உங்களுக்கு அன்பளிப்புகளாக இன்னாரிடமிருந்து அனுப்பப்பட்டுள்ளது'' என்று கூறி மூட்டைகளை வீட்டுக்குள் அடுக்கிவிட்டுப் போனார்கள். இவர் மனைவியிடம் கேட்டார்: நீ எதையாவது தர்மம் செய்யாமல் விட்டாயா?'' ஆமாம். வீட்டிலுள்ள தானியங்களை எல்லாம் தர்மம் செய்தேன். மாவரைக்கும் திருகையை மட்டும் தேவைப்படும் என வைத்துக்கொண்டேன். என்றார். கணவர் சொன்னார்: அதையும் நீ தர்மம் செய்திருந்தால் கோதுமைக்குப் பதிலாக மாவாக வந்திருக்கும். இனி நீயே உட்கார்ந்து அந்த திருகையில் கோதுமையை அரைத்து அரைத்துக் களைத்துப் போ!'' 11. பாவமற்ற பரிசுத்தமான வானவர்களின் துஆ கிடைக்கிறது: «ما من يوم يصبح العباد فيه إلا ملكان ينزلان فيقول أحدهما: اللهم أعط منفقًا خلفاً، ويقول الآخر: اللهم أعط ممسكًا تلفًا» [في الصحيحين]. நபி (சல்) கூறினார்கள்: ஒவ்வொரு நாளும் அதிகாலையில் இரு வானவர்கள் பூமிக்கு வந்து யா அல்லாஹ்.. கொடுப்பவருக்கு வளத்தைக் கொடு. தடுப்பவருக்கு அழிவைக் கொடு.'' என்று பிரார்த்திக்கின்றனர். 12. தர்மம் செய்வோருக்கு மறுமையிலும் மகத்தான பன்மடங்கு கூலி காத்திருக்கிறது: {إِنَّ الْمُصَّدِّقِينَ وَالْمُصَّدِّقَاتِ وَأَقْرَضُوا اللَّهَ قَرْضاً حَسَناً يُضَاعَفُ لَهُمْ وَلَهُمْ أَجْرٌ كَرِيمٌ} [سورة الحديد: 18]. وقوله سبحانه: {مَّن ذَا الَّذِي يُقْرِضُ اللّهَ قَرْضاً حَسَناً فَيُضَاعِفَهُ لَهُ أَضْعَافاً كَثِيرَةً وَاللّهُ يَقْبِضُ وَيَبْسُطُ وَإِلَيْهِ تُرْجَعُونَ} [سورة البقرة: 245]. 13. மன நிம்மதி கிடைக்கும்: أنّ فيها انشراح الصدر، وراحة القلب وطمأنينته، فإن النبي صلى الله عليه وسلم ضرب مثل البخيل والمنفق كمثل رجلين عليهما جبتان من حديد من ثدييهما إلى تراقيهما فأما المنفق فلا ينفق إلا اتسعت أو فرت على جلده حتى يخفى أثره، وأما البخيل فلا يريد أن ينفق شيئا إلا لزقت كل حلقة مكانها فهو يوسعها ولا تتسع. [في الصحيحين] "فالمتصدق كلما تصدق بصدقة انشرح لها قلبه، وانفسح بها صدره، فهو بمنزلة اتساع تلك الجبة عليه، فكلمَّا تصدَّق اتسع وانفسح وانشرح، وقوي فرحه، وعظم سروره، ولو لم يكن في الصَّدقة إلاّ هذه الفائدة وحدها لكان العبدُ حقيقيا بالاستكثار منها والمبادرة إليها وقد قال تعالى: {وَمَن يُوقَ شُحَّ نَفسِهِ فَأُوْلَئِكَ هُمُ المُفْلِحُونَ} [سورة الحشر: 9]. 14. பொறாமைப் படத்தக்க பாக்கியம்: أنَّ النبَّي صلى الله عليه وسلم جعل الغنى مع الإنفاق بمنزلة القرآن مع القيام به، وذلك في قوله صلى الله عليه وسلم: «لا حسد إلاّ في اثنين: رجلٌ آتاه الله القرآن فهو يقوم به آناء الليل والنهار، ورجل آتاه الله مالًا فهو ينفقه آناء الليل والنهار»، فكيف إذا وفق الله عبده إلى الجمع بين ذلك كله؟ نسأل الله الكريم من فضله. 15. நமது பொருளை சுத்தமாக்கி பாதுகாப்பைத் தரும்: أنَّ الصدقة مطهرة للمال، تخلصه من الدَّخن الذي يصيبه من جراء اللغو، والحلف، والكذب، والغفلة فقد كان النَّبي صلى الله عليه وسلم يوصي التَّجار بقوله: «يا معشر التجار، إنَّ هذا البيع يحضره اللغو والحلف فشوبوه بالصدقة» [رواه أحمد والنسائي وابن ماجة، صحيح الجامع].

ஏற்றமிகு வாழ்விற்கு இறைமறை

மனிதன் தனது வாழ்வில் இருவகைப் பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றான். உடனடிப் பிரச்சினைகள் (Immediate Problems) ஒரு வகை; நித்திய பிரச்சினைகள் (Ultimate Problems) இரண்டாம் வகை. மனித வாழ்வின் உடனடிப் பிரச்சினைகளுக்கு உதாரணங்களாக உணவு, உடை, உறையுள், சுகாதாரம் முதலான தேவைகளைக் குறிப்பிடலாம். இந்த வகைப் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதற்கு இறைவன் மனிதனுக்கு பகுத்தறிவை (Intellect) வழங்கியுள்ளான். மனிதன் பகுத்தறிவை வைத்து இயற்கையின் சட்டங்களை (Laws Of Nature) கண்டறிகின்றான். இயற்கையின் சட்டங்கள் பற்றி மனிதன் பெற்றுக் கொள்ளும் அறிவே அறிவியல் (Science) என அழைக்கப்படுகின்றது. இவ்வறிவை அவன் பிரயோகிக்கின்ற போது உருவாவதே தொழில்நுட்பம் (Technology) ஆகும். இத்தொழில்நுட்பம் மனிதன் தனது உலக வாழ்வில் எதிர் கொள்ளும் உடனடிப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணத் துணை புரிகின்றது. நான் யார்? நான் எங்கிருந்து வந்தேன்? இறுதியாக எங்கு செல்வேன்? எனது முடிவு என்ன? இவ்வுலக வாழ்வில் நான் என்ன செய்தல் வேண்டும்? இவை மனித வாழ்வுடன் தொடர்பான நித்திய பிரச்சி;னைகள். இவற்றுக்கு மனிதன் பெற்றுள்ள பகுத்தறிவினால் மாத்திரம் தீர்வு காண முடியாது. ஏனெனில், பகுத்தறிவானது காலம்(Time), இடம்( Space) ஆகிய இரண்டினாலும் வரையறுக்கப் பட்டிருக்கிறது. எனவே, இங்கு மனிதனுக்கு மற்றொரு வழிகாட்டல் தேவைப்படுகிறது. அதனைத் தரும் தகுதி காலம், இடம் என்ற வரையறைகளைக் கடந்த, முக்காலங்களையும் அறிந்த, மனிதப் பலயீனங்களிலிருந்தும் விடுபட்ட, குறைகள் குற்றங்கள் இல்லாத ஒருவனுக்கே இருக்க முடியும். இறைவன் மட்டுமே இத்தகுதிகளையும், தன்மைகளையும் பெற்றவன். எனவே, அவனால் மாத்திரமே மனிதனது நித்தியப் பிரச்சினைகளுக்குத் தீர்வு தர முடியும். இந்த வகையில் தான் இறைவன் மனிதன் தனது உடனடிப் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள அவனுக்கு பகுத்தறிவை வழங்கியது போல நித்திய பிரச்ச்pனைகளுக்கு தெளிவான தீர்வுகளைத் தரும் வகையில் காலத்துக்குக் காலம் இறைத்தூதர்களைத் தெரிவு செய்து அவர்கள் மூலம் தனது வஹி எனும் வழி காட்டலை (Revelation) மனிதனுக்கு வழங்கினான். இறைவனால் வஹியாக இறக்கியருளப்பட்ட வேதங்களின் வரிசையில் இறுதி வேதமாக அமைந்ததே அல்-குர்ஆனாகும். இன்றைய உலகு வாழ்வின் அனைத்துத் துறைகளுக்குமான வழிகாட்டியாக பகுத்தறிவையும், அதனடியாகப் பிறந்த அறிவியலையுமே ஏற்று நம்புகின்றது. இறைவழிகாட்டலையும், அதனடியாகப் பிறந்த மதத்தையும் அது நிராகரிக்கிறது. இது அறிவியல் யுகம்; மதத்துக்குரிய காலமல்ல; மதமானது அதன் பங்களிப்பை வரலாற்றில் செய்து முடித்துவிட்டது; நவீன வாழ்க்கை அமைப்பில் அதற்கு இடமில்லை என்ற வாதம் முன்வைக்கப்படுகின்றது. மேலும், அறிவியலின்றி ஒரு நாகரிகம் தோன்ற முடியாது. மதமோ அறிவியலுக்கு எதிரானதாகும். சமகால மேற்குலகின் அனைத்துத் துறைசார்ந்த முன்னேற்றதிற்கும் அது மதத்தை நிராகரித்து அறிவியலை ஏற்று விசுவாசித்தமையே காரணமாகும் என்றும் சொல்லப்படுகின்றது. மனித வாழ்வு வரலாற்று நோக்கில் மூன்று கட்டங்களைக் கொண்டது என்றும் சமயம், தத்துவம், அறிவியல் ஆகியனவே அம்மூன்று கட்டங்களுமாகும் என்றும் இந்தவகையில் இறுதிக் கட்டமான அறிவியல் யுகத்தில் இருக்கும் மனிதர்கள் சமய நம்பிக்கைகளைப் பற்றிப் பேசுவது பேதமையாகும் என்றும் வாதிக்கப்படுகின்றது. இவ்வாறு இன்றைய உலகு முழுக்க முழுக்க அறிவியலை முதன்மைப்படுத்தி இறைவழிகாட்டலையும் அதனடியாகப் பிறந்த மதத்தையும், ஆன்மீகத்தையும் புறக்கணிக்;கின்றது. இதனால் இன்றைய அறிவியல் சடவாதம் (Materialism)> சமய சார்பற்ற உலோகாயுத வாதம் (Secularism)> தாராண்மை வாதம் (Liberalism) முதலான கொள்கைகளையே அடிப்படையாகக் கொண்டுள்ளது. இதன் விளைவாக சமகால அறிவியலின் அடியாகப் பிறந்த நவயுக நாகரிகம் புறத்தைப் பார்க்கிறது.அகத்தைப் பார்ப்பதில்லை. உடலை முக்கியத்துவப் படுத்துகின்றது; உள்ளத்தை ஊணப்படுத்துகிறது. புறத்தேவைகளைப் பூர்த்தி செய்கிறது; அகத் தேவைகளை உதாசீனம் செய்கிறது. மனிதனது அறிவுக்கும், ஆன்மீகத்துக்கும் இடையில், உடலுக்கும், உள்ளத்துக்கும் இடையில், புறத்துக்கும், அகத்துக்கும் இடையில் பேணப்பட வேண்டிய சமநிலையை இன்றைய அறிவியல் யுகம் பேணத் தவறியதன் கோர விளைவுகளை சமகால மனிதன் மிக மோசமாக அனுபவிக்கத் துவங்கியுள்ளான். உலகம் கண்டு கொண்டிருக்கும் அரசியல் நெருக்கடிகள், பொருளாதார மந்தநிலை, சூழல் சுற்றாடல் பிரச்சினைகள், நோய்கள் உட்பட ஒழுக்க வீழ்ச்சி, சமூகத் தீமைகள், அனாச்சாரங்கள் முதலான அனைத்துப் பிரச்சினைகளுக்குமான மூல காரணம் குறித்த சமநிலையைப் பேணத் தவறியமையாகும். இந்நிலையில் இன்றைய உலகு மனநிறைவான, மகிழ்ச்சிகரமான, அமைதியான மனித வாழ்வுக்கு வழிகாட்டக்கூடிய ஒரு மாற்று நாகரிகத்தை, கொள்கையை ஏக்கத்தோடு எதிர்பார்த்து நிற்கின்றது. இறுதி வேதம் இறைமறை அல்-குர்ஆன் இன்றைய உலகின் இன்றியமையாத இத்தேவையை நிறைவு செய்யும் முழுமையான வல்லமையையும், தகுதியையும் பெற்றிருக்கிறது. அல்-குர்ஆன் வெறுமனே கிரேக்கர்கள் செய்தது போன்று மனிதனது மூளையைத் தத்துவக் கருத்துக்களால் நிரப்ப விரும்புவதில்லை; அல்லது இந்தியர்கள் செய்தது போன்று வெறும் ஆன்மீக அனுபவங்களை மாத்திரம் மனிதனுக்கு வழங்க விரும்புவதில்லை. அல்லது ரோமர் களைப் போன்று மனிதனின் வெறும் உடல் வளர்ச்சியை மாத்திரம் கருத்திற் கொள்வதில்லை; அல்லது இன்றைய உலகம் நோக்குவது போன்று மனிதனது சடரீதியான வளர்ச்சிக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பதுமில்லை. மாறாக, அல்-குர்ஆன் மனிதனை உடல், உள்ளம், சிந்கனை ஆகிய மூன்று கூறுகளினால் உருவானவன் எனக் காண்கிறது. இவ்வடிப்படையிலேயே அவனது ஆளுமையை வளர்ப் பதற்கான திட்டத்தையும் வழங்கியுள்ளது. இக்கூறுகளில் ஒன்று மற்றையதை மிகைத்து விடாதவாறு மூன்றுக்கும் சம அளவான முக்கியத்துவத்தை அது வழங்குகின்றது. அறிவுப் பலம், ஆன்மீகப் பலம், உடற் பலம், பண்பாட்டுப் பலம் ஆகிய அனைத்துச் சக்திகளையும் ஒருங்கே பெற்றவனே அல்-குர்ஆனிய ஆளுமையை முழுமையாகப் பெற்றவனாகக் கொள்ளப் படுகின்றான். அடிப்படையாக அல்-குர்ஆன் மனிதனின் ஆளுமையை ஆன்மீக ரீதியாகக் கட்டியெழுப்ப விரும்புகின்றது. இந்த வகையில் முதலாவதாக ஆன்மீக வளர்ச்சியின் முக்கியத்துவத்தை அது வலியுறுத்துகிறது. 'நிச்சயமாக அதனை (ஆன்மாவை) தூய்மைப்படுத்தியவன் வெற்றி பெற்றான். அதனை மாசு படுத்தியவன் தோல்வியடைந்தான்' ( 91:9,10)எனக் கூறுகிறது. அதற்கான வழிமுறைகளையும் அது விளக்குகிறது. தொழுகை, திக்ர் போன்றவற்றை உதாரணமாகக் குறிப்பிடலாம். ஆன்மீகத்தைப் பொறுத்த வரையில், அல்-குர்ஆன் காண விரும்பும் மனிதர்கள் எத்தகையோரென்றால்............ 'அவர்கள் நின்ற நிலையிலும், இருந்த நிலையிலும், சாய்ந்த நிலையிலும் அல்லாஹ்வை திக்ர் செய்பவர்கள்' ( 3:191) மேலும்,'(இரவிலே) தங்களது படுக்கையிலிருந்து தங்கள் விலாக்களை உயர்த்தி( எழுந்து அப்புறப்பட்டு) தங்கள் இறைவனிடம் நம்பிக்கை வைத்தும் பயந்தும் (அவனைப்) பிரார்த் தனை செய்வார்கள்.' ( 32: 16) மேலும் அவர்கள்,'தங்கள் இறைவனை நின்றவர்களாகவும், சிரம் பணிந்தவர்களாகவும், இரவெல்லாம் வணங்கிக் கொண்டிருப்பார்கள்.' ( 25: 64) மேலும்,'இரவு வேளையிலே (நடுநிசியிலே) அவர்கள் பாவமன்னிப்புக் கோருவோராய் இருப்பர்.' (3:17) அடுத்து, அல்-குர்ஆன் மனிதனை அவனது ஆளுமையை அறிவு, சிந்தனை ரீதியாகக் கட்டியெழுப்ப விரும்புகின்றது. அந்த வகையில் முதலில் அறிவின் முக்கியத்துவம் அல்- குர்ஆனில் விளக்கப்படுகின்றது. அதன் ஆரம்ப வசனமே அறிவைப் பற்றியும், அறிவிற்குத் துணை புரிகின்ற வாசிப்பு, எழுத்து, எழுதுகோல் பற்றியும் பேசுவதைக் காண முடிகின்றது. தொடர்ந்து இறங்கிய வசனமும் எழுத்தினதும்,பேனாவினதும், நூல்களினதும் முக்கியத் துவத்தை வலியுறுத்தும் விதத்தில் அமைந்துள்ளது. 'நூன், பேனாவின் மீது சத்தியமாக! ஆதனைக் கொண்டு அவர்கள் எழுதியவை மீது சத்தியமாக' (60:1) முதல் மனிதன் ஆதம் (அலை) அவர்களைப் படைத்த அல்லாஹ் அவர்களுக்கு முதலில் வழங்கிய அருட்கொடை அறிவாகும் என்பதை அல்-குர்ஆன் பின்வருமாறு விளக்குகின்றுது: 'மேலும், ஆதமுக்கு அவன் (பொருட்களின்) பெயர்கள் அனைத்தையும் கற்றுக் கொடுத்தான்'(1:31) ஆதம் (அலை) அவர்கள் இவ்வறிவின் காரணமாகவே மலக்குகளை விட உயர்ந்தவராக மாறினார் என்பதை தொடர்ந்து வரும் வசனம் கீழ்வருமாறு விளக்குகிறது: ' பின்னர் அவற்றை (அல்லாஹ்) வானவர்கள் முன் வைத்து 'நீங்கள் கூறுவது உண்மையாயின் இவற்றின் பெயர்களை நீங்கள் தெரிவியுங்கள்' எனக் கூறினான். அவர்கள் (அதற்கு) ' நீ மிகத் தூய்மையானவன்; நீ எங்களுக்குக் கற்பித்தவற்றைத் தவிர எதைப் பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை; நிச்சயமாக நீயே நன்கறிந்தவன்; தீர்க்கமான அறிவுடையவன்' எனக் கூறினார்கள்'( 1:32) ஆதம் (அலை) அவர்கள் மலக்குகளை விட அறிவில் உயர்ந்தவர்களாக விளங்கிய காரணத் தினாலேயே அன்னாருக்கு 'சுஜூது' செய்யுமாறு அல்லாஹ் அவர்களைப் பணித்தான். ஸூரதுல் பகராவில் தொடர்ந்து வரும் வசனம் இவ்வுண்மையை விளக்குகின்றது. ' மேலும் நாம் மலக்குகளிடம்,'ஆதமுக்கு நீங்கள் சுஜூது செய்யுங்கள் எனக் கூறிய போது இப்லீஸைத் தவிர இவர்கள் (அனைவரும்) சுஜூது செய்தார்கள்.....' (1:34) நபி மூஸா (அலை) அவர்கள் 'உலுல் அஸ்ம்' என்றழைக்கப்படும் ஆறு பெரும் திட உறுதி பூண்ட இறைத் தூதர்களில் ஒருவராவார். அத்தகைய உயர் அந்தஸ்தைப் பெற்றிருந்த அவர்கள் அறிவு ஞானத்தைப் பெற்றிருந்த ஓர் இறையடியாரை பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் கண்டு பிடித்து பொறுமையுடன் அவரிடம் அறிவைப் பெற்ற கதையை அல்-குர்ஆனின் அல்-கஹ்ப் எனும் அத்தியாயம் குறிப்பிடுகின்றது. அறிவு எனும் பொருள்படும் 'இல்ம்' என்ற பதம் அல்-குர்ஆனில் 80 இடங்களில் இடம் பெற்றுள்ளது. இப்பதத்தில் இருந்து பிறந்த சொற்களோ அல்-குர்ஆனில் பல நூறு தடவைகள் வந்துள்ளன. அறிவு என்னும் கருத்தைக் கொடுக்கும் அல்-அல்பாப் எனும் சொல் அல்- குர்ஆனில் 16 முறை குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த பொருளைத் தரும் அந்-நுஹா என்ற சொல் இரு தடவைகள் வந்துள்ளன. அல்-குர்ஆனில் இடம்பெற்றுள்ள பகுத்தறிவு என்ற பொருளைக் கொடுக்கின்ற அல்-அக்ல் என்ற வினையடியிலிருந்து பிறந்த சொற்களின் எண்ணிக்கை 49 ஆகும். சிந்தனை என்ற கருத்தில் பயன்படுத்தப்படும் அல்- பிக்ர் என்ற சொல்லிலிருந்து பிறந்த 18 சொற்களும் இடம் பெற்றுள்ளன; அல்- பிக்ஹ் (விளக்கம்) என்ற பதத்திலிருந்து பிறந்த 21 சொற்களும் காணப்படுகின்றன. அல்- ஹிக்மா (ஞானம்) என்ற பதம் 20 தடவைகள் வந்துள்ளதுடன், ஆதாரம் என்னும் பொருள்படும் அல்- புர்ஹான் என்னும் சொல் 7 தடவைகளும் அல்-குர்ஆனில் இடம்பெற்றுள்ளன. இவற்றுடன் 'ஆராய்தல்','நோக்குதல்','சிந்தித்தல்' போன்ற கருத்துக்களைத் தரும் பல சொற்களும் அல்-குர்ஆனில் ஆங்காங்கே இடம்பெற்றுள்ளன. சிந்திக்கவும் ஆராயவும் மனிதனைத் தூண்டுகின்ற பல வசனங்களை அல்- குர்ஆனில் காண முடிகின்றது. 'அவர்கள் சிந்திக்க மாட்டார்களா?' 'நீங்கள் யோசனை செய்வதில்லையா?' 'அறிவுள்ள, சிந்திக்கின்ற மனிதர்களுக்கே இதில் அத்தாட்சி உண்டு' 'இது அறிவுள்ளவர்களுக்கே' 'இது சிந்தனைத் தெளிவுள்ளவர்களுக்கே' போன்ற அமைப்பில் முடிவடைகின்ற அதிகமான வசனங்களை அல்-குர்ஆனில் பரவலாகக் காண முடியும். ஆன்மீகமும், அறிவும் ஒன்றோடொன்று இணைந்தவைகளாகும். ஆளுமையை உருவாக்கும் இரு அடிப்படைக் கூறுகளாக இவை காணப்படுகின்றன. இவையிரண்டையும் பிரிப்பது பிழையானதாகும். ஏனெனில், மனிதனது நடத்தை என்பது அவனது சிந்தனையின் வாழ்வு- பிரபஞ்சம்-மனிதன் ஆகியவற்றைப் பற்றிய அவனது கருத்தின் வெளிப்பாடாகும். இதனால் தான் அல்-குர்ஆன் இவையிரண்டையும் பல இடங்களில் இணைத்துள்ளதுடன் சில போது அறிவை,ஈமானிலும் முற்படுத்திக் கூறியிருப்பதனை அவதானிக்க முடிகின்றது. 'எவர்களுக்குக் கல்வியறிவு கொடுக்கப்பட்டிருக்கிறதோ அவர்கள் நிச்சயமாக இது உமது இறைவனிடமிருந்து வந்த உண்மை என்று உறுதியாக அறிந்து, விசுவாசித்து, மனப்பூர்வமாகவே அவனுக்கு வழிப்படுகின்றனர்.' (22:54) ஆளுமையின் மேலுமொரு கூறான பண்பாடு பற்றியும் அல்-குர்ஆன் பேசுகின்றது. பண்பாட்டு ரீதியில் மனிதனது ஆளுமை கட்டியெளுப்பப்பட வேண்டியதன் அவசியத்தையும் அது வலியுறுத்துகிறது. நெஞ்சுரம், வாய்மை, துணிச்சல், நேர்மை, உறுதி, நன்மையை ஏவித் தீமையைத் தடுத்தல், சுத்தம் பேணல்,சட்டத்தையும் ஒழுங்கையும் பேணல் போன்ற பல பண்புகளைப் பற்றி அல்-குர்ஆன் பேசுகிறது. குறிப்பாக அல்-குர்ஆனிய மனிதனின் ஆளுமைக் கு உரமூட்டும் 4 பண்புகளைக் குறிப்பிட முடியும். 1. 'ஸப்ர்' எனும் பொறுமையும், சகிப்புத் தன்மையும் 2. 'ஸபாத்' எனும் உறுதியும், ஸ்திரத் தன்மையும் 3. 'அமல்' எனும் நம்பிக்கையும், எதிர்பார்ப்பும் 4. 'பத்ல்' எனும் தியாகமும், உழைப்பும் அல்-குர்ஆன் 'ஸப்ரை' வெற்றியாளர்களின் ஓர் அடிப்படைப் பண்பாகக் குறிப்பிடுகின்றது. லுக்மான் (அலை) அவர்கள் தனது மகனுக்குச் செய்த உபதேசங்களில் ;ஸப்ரும்' இடம் பெற்றுள்ளமையைக் காண முடிகின்றது. 'அருமை மகனே! தொழுகையை நிலைநாட்டு. நன்னையை ஏவித் தீமையை விலக்கு. உனக்கேற்பட்ட துன்பங்களைச் சகித்துக் கொள். இவை உறுதியான விடயங்களில் உள்ளவையாகும்.' (31:17) மேலும், போராளிகள் பிரார்த்தனையாக 'ஸப்ர்' அமைவதனை அல்-குர்ஆன் கீழ்வருமாறு குறிப்பிடுகின்றது, ' எங்கள் இறைவனே! நீ எங்கள் மீது பொறுமையைச் சொரிவாயாக! எங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவாயாக! நிராகரிக்கும் இம்மக்கள் மீது (வெற்றி பெற) நீ எங்களுக்கு உதவி செய்வாயாக!'(2: 250) இரண்டாவது பண்பான 'ஸபாத்தை' தனது இலட்சியப் பாதையில், அது எவ்வளவு நீண்டதாக இருப்பினும் ஸ்திரமாக நிலைத்து நிற்பதைப் பற்றி அல்-குர்ஆன் விளக்குகின்றது. ஆரம்பகால நபித்தோழர்களிடத்தில் காணப்பட்ட இப்பண்பை அது சிலாகித்துப் கூறுகின்றது. 'விசுவாசிகளில் சிலர் இருக்கின்றனர். அவர்கள் அல்லாஹ்விடம் தாம் செய்த உடன் படிக்கையை உண்மையாக்கி வைத்தார்கள். அவர்களில் சிலர் (வீரமரணமடைந்து) தமது இலக்கை அடைந்து விட்டனர். வேறு சிலர் அதனை எதிர்பார்த்து நிற்கின்றனர். அவர்கள் (தமது) வாக்கை ஒரு சிறிதும் மாற்றவில்லை.' (33:23) அடுத்த பண்பான 'அமல்' எனும் இறுதி வெற்றி அல்லாஹ்வுடைய மார்க்கத்திற்கே கிட்டும் என்ற நம்பிக்கை இருக்க வேண்டியதன் அவசியத்தைப் பற்றியும் அது விளக்குகின்றது. 'வழி தவறியோரைத் தவிர வேறு எவர்தான் இறைவனது அருளில் நம்பிக்கை இழக்க முடியும்!'( 15:56) இறுதிப் பண்பான 'பத்ல்' தியாகம் பற்றி விளக்குகின்ற பல வசனங்களை அல்-குர்ஆனில் காண முடியும். காலம், நேரம், பணம், சக்தி ஆகியவற்றை இறைபாதையில் செலவு செய்ய வேண்டியதன் அவசியத்தை அல்-குர்ஆன் ஆங்காங்கே வலியுறுத்தி நிற்கின்றது. மனிதனது ஆளுமை முழுமை பெற உடலாரோக்கியமும் குறிப்பிடத்தக்க இடத்தை வகிக்காமலில்லை. இதனாலேயே அல்-குர்ஆன் உடலாரோக்கியம் பேணல், அதன் தேவைகளைக் கவனித்தல், அதற்கு வலுவூட்டல் போன்றவற்றின் அவசியத்தைப் பற்றிப் பேசுகின்றது. உதாரணமாகக் கீழ்வரும் அல்-குர்ஆன் வசனத்தைக் கவனிப்போம். '(நபியே!) கூறும்: அடியார்களுக்காக அல்லாஹ் நெறிப்படுத்தியுள்ள அலங்காரங்களையும் நல்ல ஆகாரங்களையும் ( கூடாதவையென) விலக்குவோர் யார்' (7:32) உடம்புக்குத் தீங்கையும், கேட்டையும் ஏற்படுத்தக் கூடியவற்றைத் தவிர்க்குமாறு அல்-குர்ஆன் பணிக்கின்றது. ' மேலும், நீங்கள் விபச்சாரத்தை நெருங்கவும் வேண்டாம்' ( 17:32) இவ்வாறு அல்-குர்ஆன் தான் காண விரும்பும் முழுமையான ஆளுமை பெற்ற மனிதனுக்குத் தேவையான அனைத்து அடிப்படைகளையும் அழகுற விளக்கியுள்ளதைக் காணலாம். இறைவழிகாட்டலின் துணையற்ற உலோகாயுதக் கோட்பாடுகளின் அடிப்படையில் எழுப்பப்பட்ட அறிவியலினதும், நாகரிகத்தினதும் மோசமான விளைவுகள் மனித வாழ்வை சீர்குலைத்துக் கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில் மனித சமூகம் தான் அனுபவித்துக் கொண்டிருக்கும் அனைத்து அவலங்களிலிருந்தும் விடுபட்டு ஏற்றமிகு வாழ்வைப் பெற விரும்பினால் இறைமறை அல்-குர்ஆனை ஏகவழிகாட்டியாக ஏற்று, நம்பி கடைபிடிப்பதைத் தவிர அதற்கு மாற்று வழியில்லை.

ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2012

பத்ரு

'பத்ரு' 3:13 (பத்ரு களத்தில்) சந்தித்த இரு சேனைகளிலும் உங்களுக்கு ஓர் அத்தாட்சி நிச்சயமாக உள்ளது. ஒரு சேனை அல்லாஹ்வின் பாதையில் போரிட்டது. பிறிதொன்று காஃபிர்களாக இருந்தது. நிராகரிப்போர் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோரைத் தங்களைப்போல் இரு மடங்காகத் தம் கண்களால் கண்டனர்;. இன்னும், அல்லாஹ் தான் நாடியவர்களுக்குத் தன் உதவியைக் கொண்டு பலப்படுத்துகிறான்;. நிச்சயமாக, (அகப்) பார்வையுடையோருக்கு இதில் திடனாக ஒரு படிப்பினை இருக்கிறது. 8:5 (நபியே!) உம் இறைவன் உம்மை உம் வீட்டைவிட்டு சத்தியத்தைக் கொண்டு (பத்ரு களம் நோக்கி) வெளியேற்றிய போது முஃமின்களில் ஒரு பிரிவினர் (உம்முடன் வர இணக்கமில்லாது) வெறுத்துக் கொண்டிருந்தது போல. 8:17 (பத்ரு போரில்) எதிரிகளை வெட்டியவகள் நீங்கள் அல்ல - அல்லாஹ் தான் அவர்களை வெட்டினான்; (பகைவர்கள் மீது மண்ணை) நீர் எறிந்தபோது அதனை நீர் எறியவில்லை, அல்லாஹ்தான் எறிந்தான்; முஃமின்களை அழகான முறையில் சோதிப்பதற்காகவே அல்லாஹ் இவ்வாறு செய்தான்; நிச்சயமாக அல்லாஹ் (எல்லாவற்றையும்) செவி ஏற்பவனாகவும், (எல்லாம்) அறிபவனாகவும் இருக்கின்றான். 8:41 (முஃமின்களே!) உங்களுக்கு(ப் போரில்) கிடைத்த வெற்றிப் பொருள்கிளிலிருந்து நிச்சயமாக ஐந்திலொரு பங்கு அல்லாஹ்வுக்கும், (அவன்) தூதருக்கும்; அவர்களுடைய பந்துக்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும் உரியதாகும் - மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டு, இரு படைகள் சந்தித்துத் தீர்ப்பளித்த (பத்ரு நாளில்) நாம் நம் அடியார் மீது இறக்கி வைத்த உதவியை (அல்லாஹ்வே அளித்தான் என்பதை)யும் நீங்கள் நம்புவீர்களானால் (மேல்கூறியது பற்றி) உறுதியாக அறிந்து கொள்ளுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன். 8:42 (பத்ரு போர்க்களத்தில் மதீனா பக்கம்) பள்ளத்தாக்கில் நீங்களும், (எதிரிகள்) தூரமான கோடியிலும், (குறைஷி வியாபாரிகளாகிய) வாகனக்காரர்கள் உங்கள் கீழ்ப்புறத்திலும் இருந்தீர்கள். நீங்களும் அவர்களும் (சந்திக்கும் காலம் இடம் பற்றி) வாக்குறுதி செய்திருந்த போதிலும் அதை நிறைவேற்றுவதில் நிச்சயமாகக் கருத்து வேற்றுமை கொண்டிருப்பீர்கள்; ஆனால் செய்யப்பட வேண்டிய காரியத்தை அல்லாஹ் நிறைவேற்றுவதற்காகவும், அழிந்தவர்கள் தக்க முகாந்தரத்துடன் அழிவதற்காகவும், தப்பிப் பிழைத்தவர்கள் தக்க முகாந்தரத்தைக் கொண்டே தப்பிக்கவும் (இவ்வாறு அவன் செய்தான்) - நிச்சயமாக அல்லாஹ் செவியேற்பவனாகவும், அறிபவனாகவும் இருக்கின்றான்