திங்கள், 1 பிப்ரவரி, 2016

புதுக்கோட்டை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை தேர்தல்

                                       
      




 புதுக்கோட்டை மாவட்ட சுன்னத் வல் ஜமாஅத் ஜமாஅத்துல் உலமா சபையின் தேர்தல் கூட்டம் கடந்த 15.12.2015 செவ்வாய்க்கிழமை அன்று புதுக்கோட்டை தெற்கு 2ம் வீதி பெரியபள்ளிவாசலில் நடைபெற்றது. பொதுக்குழு உறுப்பினர்கள் 180 பேர் கலந்து தங்களது  மனவிருப்பப்படி வாக்களித்து புதிய நிர்வாகிகளை தேர்வு செய்தனர்.
      மாவட்ட  தலைவராக   மவ்லானா அல்ஹாஜ்   N.M. அமானுல்லாஹ் இம்தாதி ஹழ்ரத் புதுக்கோட்டை  அவர்களும்,      மாவட்ட செயலாளராக மவ்லானா அல்ஹாபிழ் S.A.ஜாபர் அலி உலவி ஹழ்ரத் ஜெகதாப்பட்டிணம் அவர்களும்,  மாவட்ட பொருளாளராக மவ்லானா S.சதக்கத்துல்லாஹ் தாவூதி ஹழ்ரத் புதுக்கோட்டை அவர்களும் தேர்வு செய்யப்பட்டனர். 

              19.01.2016 செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டதில் ஆறு வட்டாரங்களை உள்ளடக்கிய துணை பொறுப்புகளுக்கு கீழ்காணும் உலமாக்கள் மவ்லவி M.J.முஹம்மது முஹ்யித்தீன் தாவூதி ஹழ்ரத்  அறந்தாங்கி வட்டாரம், மவ்லவி N.செல்வகனி மரைக்காயர் தாவூதி ஹழ்ரத்  இலுப்பூர் வட்டாரம், மவ்லவி B.ஜவாஹிர் ஹுசைன் ஸிராஜி ஹழ்ரத் கடற்கரை வட்டாரம் ஆகியோர் துணைத் தலைவர்களாகவும்,  மவ்லவி அப்ழலுல் உலமா M .செய்யிது இப்ராகிம் முனீரி M .A ஹழ்ரத் புதுக்கோட்டை வட்டாரம், மவ்லவி A.S.முஹம்மது ரியாஸ்கான் உலவி ஹழ்ரத் திருமயம் வட்டாரம், மவ்லவி A.பக்ருத்தீன் பத்ரி ஹழ்ரத் ஆலங்குடி வட்டாரம் ஆகியோர் துனைச்செயலாளர்களாகவும் தேர்வு செய்யப்பட்டனர் .

               

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக