இந்த
உலகில்
தோன்றி
வளர்ந்த மதங்களில் இஸ்லாத்தின் வளர்ச்சி போன்று
எந்த
மதங்களும் இல்லை.
காரணம்
இஸ்லாம் இந்த
உலகிற்கு போதித்த பண்புகளின் தாக்கம். இதை
மாற்றாரும் ஏற்றுக் கொள்கிறார்கள் என்றாலும், நமது
முன்னோர்களின் ஷஹாதத்தும், தியாகமும் தான்
இந்த
மார்க்கத்தின் மைல்கல் என்பதை
விளங்க
வேண்டும். ஆம்!
عَنْ أَبِي هُرَيْرَةَ ، قَالَ : سُئِلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، " أَيُّ الأَعْمَالِ أَفْضَلُ ؟ قَالَ : إِيمَانٌ بِاللَّهِ وَرَسُولِهِ " . قِيلَ : ثُمَّ مَاذَا ؟ قَالَ : " ثُمَّ الْجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ "
இந்த போருக்காக, இதனால் கிடைக்கும் பேருக்காக தங்களின் உயிரைத் துறந்த சஹாபிகளின் தியாகத்தால் இந்த மார்க்கம் மலர்ந்து விரிந்தது.
சரித்திரம் 1. நபியின் காலம். பத்ரு யுத்தத்திற்கான அறிவிப்பு நபியவர்களிடமிருந்து வந்த போது خيثمة என்ற சஹாபி தன் மகன் سعد என்பவரிடம் கூறினார், மகனே! வாழும் காலம் உனக்கு இருக்கிறது. நான் உன் தகப்பன், எனவே என் சொல்லை மீறாதே, யுத்தத்தில் நான் கலந்து கொள்கிறேன். நீ வீட்டில் இரு என்றார். மகன் அதற்கு ஒத்து வரவில்லை. தந்தையே! உலக ஆதாயம் என்றால் பரவாயில்லை, இது மறுமை பேறுக்கான வாய்ப்பு. இதை நான் விட்டுக் கொடுக்க மாட்டேன் என்றார். கடைசியாக வழக்கு நபியிடம் கொண்டு செல்லப் பட்டு போரில் கலந்து கொள்ளும் வாய்ப்பை மகனே பெற்று ஷஹீதானார்.
قال خيثمة بن الحارث لابنه سعد إنه لا بد لأحدنا من أن يقيم فآثرني بالخروج وأقم مع نسائك فأبى سعد وقال لو كان غير الجنة آثرتك به إني أرجو الشهادة في وجهي هذا، فاستهما فخرج سهم سعد فخرج مع رسول الله إلى غزوة بدر فاستشهد يومئذ قتله عمرو بن عبد ود
யார் இவர்கள்? பரம்பரை முஸ்லிம்களா? ! தன்னை எதிர்த்துப் பேசியவனின் குடும்பத்தைக் கூட கூண்டோடு ஒழித்த கூட்டம். இன்று ஷஹாதத்திற்காக சண்டை போட்டுக் கொண்டிருக்கிறது.
இந்த தியாகிகளாலும் இவர்தம் தியாகத்தாலும் தான் இஸ்லாம் வளர்ந்தது.
சரித்திரம் 2. உஹத் யுத்தம்: நபியவர்கள் زيد بن ثابت அவர்களை அழைத்து யுத்த களத்தில் சஃது இப்னு ரபீஃ இருந்தால் என் ஸலாமைச் சொல்லி அவரின் நிலையை விசாரித்து வாருங்கள் என்று சொல்லி அனுப்பினார்கள். வந்தவர் சஃதைப் பார்த்து நபியின் ஸலாத்தை சொல்லி தாங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்றார். அதற்கு சஃது (ரலி) "சொர்க்கத்தின் நறுமணத்தை நுகருகிறேன்" என்று சொல்லி விட்டு என் சமூகத்து அன்சாரிகளிடம் சொல்லுங்கள். உங்கள் கண்களில் மட்டும் உயிர் இருக்கும் கடைசி நேரமானாலும் நபிக்கு பாதுகாப்புக் கொடுக்காமல் ஏதாவது காரணம் சொன்னால் அல்லாஹ் அதை ஏற்றுக் கொள்ள மாட்டான் என்ற செய்தியை என் சமூகத்தாரிடம் சொல்லுங்கள். என்ற செய்தியோடு இவ்வுலகைப் பிரிவார்கள் சஃது அவர்கள்.
عن زيد بن ثابت –رضي الله عنه – قال: "بعثني رسول الله –صلى الله عليه وسلم- يوم (أُحُد) لطلب سعد بن الربيع –رضي الله عنه وأرضاه- في القتلى، وقال لي: إن رأيته فأقرِئْه مني السلام، وقل له: يقول رسول الله -صلى الله عليه وسلم-: أخبرني كيف تجده؟ قال زيد: فجعلت أبحث عنه في القتلى، فأصبته وهو في آخر رمق، به سبعون ضربة؛ ما بين طعنة رمح، وضربة سيف، ورمية سهم، فقلت له: يا سعد إن الله يقرئك السلام، ويقول: أخبرني كيف تجده؟ قال: وعلى رسول الله -صلى الله عليه وسلم- السلام وعليك السلام، قل له: إني -والله- لأجد رائحة الجنة" ليس هذا موضع الشاهد، ولكن اسمع ماذا قال؟ "وقل لقومي الأنصار: لا عذر لكم عند الله أن يُخلص إلى رسول الله -صلى الله عليه وسلم- وفيكم عين تطرف" ثم فاضت روحه -رحمه الله-
இந்த தியாகிகளாலும் இவர்தம் தியாகத்தாலும் தான் இஸ்லாம் வளர்ந்தது. .
சரித்திரம் 3. காதிஸிய்யா யுத்தம்: ஒன்னரை லட்சம் வீரர்களோடு எதிரிப்படை பாளையம் இறங்கியிருக்கிறது. உமர் {ரலி} அவர்கள் இஸ்லாமியப் படையின் தளபதியாக مقرن رض
என்பவரை நியமனம் செய்து தைரியமும் சொல்லி அனுப்பினார்கள். இஸ்லாமியப் படை முன்னேறிச் சென்றது. எதிரிகள் தந்திரமொன்று செய்தார்கள். குதிரைகளின் கால் குழம்பைக் காயப்படுத்தும் ராட்சத ஆணிகளை மண்ணுக்கடியில் புதைத்து வைத்திருந்தார்கள். அதனால் இஸ்லாமியப் படைக்கு நெருக்கடி ஏற்பட்டது. இஸ்லாமியப் படைத்தளபதி مقرن ஒரு தந்திரம் செய்தார். போர் நிறுத்தத்திற்கு அடையாளமாக மூட்டப்படும் நெருப்பை மூட்டினார்கள். பிறகு தன் வீரர்களுக்கு சொன்னார்கள். எதிரிகள் நாம் பயந்து விட்டதாக எண்ணுவார்கள். அப்பொழுது மூன்று தக்பீர் சொல்லப் படும். தக்பீருக்குப் பிறகு உடனே தாக்குதலை ஆரம்பிக்க வேண்டும் என்றார்கள். திட்டமிட்டபடியே யுத்தம் நடைபெற்றது. வெற்றியும் கிடைத்தது, அந்த வெற்றிக்குப் பின்னால் مقرن அவர்களின் உயிரும் பிரிந்திருந்தது.
எதிரிப் படைத்தளபதி طليحة நாம் ஏன் தோற்றுப் போனோம், என்று ஆராய்ந்தார். ஒற்றன் ஒருவன் இப்படிச் சொன்னான்,
فلما رأى طليحة كثرة انهزام اصحابه قال ويلكم ما يهزمكم قال رجل منهم وانا احدثك ما يهزمنا انه ليس منا رجل الا وهو يحب ان يموت صاحبه قبله وانا لنلقى قوما كلهم يحب ان يموت قبل صاحبه இஸ்லாமியப் படைவீரர்கள், தன் சகோதரனுக்கு முன்னால் தான் இறக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள், நம் படைவீரர்களோ தனக்கு முன்னால் தன் சகோதரன் இறக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். இதுதான் நமது தோல்விக்கும், அவர்களின் வெற்றிக்கும் காரணம் என்றான்.
இந்த தியாகிகளாலும் இவர்தம் தியாகத்தாலும் தான் இஸ்லாம் வளர்ந்தது.
சரித்திரம் 3. பனூ ஹனீப்ஃ எனும் கோத்திரத்தார். நபியிடம் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதற்காக வந்திருந்தனர். தங்களது வாகனங்களின் பாதுகாப்பதற்காக முஸைலமா என்பவனை நியமணம் செய்தனர். ஊர் திரும்புகையில் இந்த முஸைலமா கூறினான். நான்தான் நபி, என்னை எல்லோரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றான், மக்களும் அவனை ஏற்றுக் கொண்டனர். பிறகு நபிக்கு ஒரு கடிதம் எழுதினான்.
وقد كان مسيلمة بن حبيب ، قد كتب إلى رسول الله صلى الله عليه وسلم : من مسيلمة رسول الله ، إلى محمد رسول الله : سلام عليك ؛ أما بعد ، فإني قد أشركت في الأمر معك ، وإن لنا نصف الأرض ، ولقريش نصف الأرض ، ولكن قريشا قوم يعتدون . فقدم عليه رسولان له بهذا الكتاب . قال ابن إسحاق : فحدثني شيخ من أشجع ، عن سلمة بن نعيم بن مسعود الأشجعي ، عن أبيه نعيم ، قال : سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لهما حين قرأ كتابه : فما تقولان أنتما ؟ قالا : نقول كما قال ، فقال : أما والله لولا أن الرسل لا تقتل لضربت أعناقكما . ] .
அந்த கடிதத்தில் பூமியை இரண்டாக பிரித்து பாதி (உமக்கு) குரைஷிகளுக்கு மீதி எனக்கு. என்று எழுதி இரண்டு நபர்களிடம் கொடுத்து அனுப்பினான். நபியவர்கள் படித்து விட்டு "தூதுவர்களை கொலை செய்யக்கூடாது என்ற மரபு மட்டும் இல்லையென்றால் உங்கள் இருவரின் தலையையும் கொய்திருப்பேன்" என்றார்கள். பிறகு நபி ثم كتب إلى مسيلمة : بسم الله الرحمن الرحيم ، من محمد رسول الله ، إلى مسيلمة الكذاب : السلام على من اتبع الهدى . أما بعد ، فإن الأرض لله يورثها من يشاء من عباده ، والعاقبة للمتقين [ ص: 601 பூமி இறைவனுக்குச் சொந்தம். இதை பங்குபோடும் உரிமை எவருக்குமில்லை என்றெழுதி حبيب بن زيد என்பவரிடம் கொடுத்தனுப்பினார்கள். படித்து பார்த்த முஸைலமா حبيب بن زيد அவர்களை கைது செய்ய உத்தரவிட்டான். என்னை நபியாக ஏற்றுக் கொள்கிறாயா? என்று பலமுறை கேட்டான், حبيب بن زيد அவர்கள் துளியளவும் அவனைப் பிரியப்படவில்லை. கோபமடைந்த முஸைலமா حبيب بن زيد அவர்களை ஒவ்வொரு உறுப்பாக வெட்டி வெட்டி கொலை செய்தான்.
இந்த தியாகிகளாலும் இவர்தம் தியாகத்தாலும் தான் இஸ்லாம் வளர்ந்தது.
மாநபியை விமர்ச்சித்ததற்காக இயக்கங்கள் ஒன்று சேர்ந்து பிரமாண்ட கூட்டத்தை கூட்டியதால் ஏதோ இஸ்லாத்திற்கு பெரும் பேரை தேடிக் கொடு்த்து விட்டோம் என்றோ, வருடத்திற்கொருமுறை மீலாது விழாக்கள் நடத்துவதாலோ, நம்முடைய முயற்சியில்தான் இஸ்லாம் வளர்ந்து வருகிறது என்றோ யாரேனும் மனப்பால் குடித்தால் அது மடத்தனமானது. இஸ்லாம் தியாகிகளால் வளர்ந்தது..!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக