புதுக்கோட்டை மாவட்ட இஜ்திமா இன்ஷா அல்லாஹ் வரும் 03.02.2016 புதன் அஸா் முதல் 04.02.2016 வியாழன் இஷா வரை அரசா்குளத்தில் நடைபெறும். அனைவா்களும் கலந்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்..
திங்கள், 1 பிப்ரவரி, 2016
புதுக்கோட்டை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை தேர்தல்
புதுக்கோட்டை மாவட்ட சுன்னத் வல் ஜமாஅத் ஜமாஅத்துல் உலமா சபையின் தேர்தல் கூட்டம் கடந்த 15.12.2015 செவ்வாய்க்கிழமை அன்று புதுக்கோட்டை தெற்கு 2ம் வீதி பெரியபள்ளிவாசலில் நடைபெற்றது. பொதுக்குழு உறுப்பினர்கள் 180 பேர் கலந்து தங்களது மனவிருப்பப்படி வாக்களித்து புதிய நிர்வாகிகளை தேர்வு செய்தனர்.
மாவட்ட தலைவராக மவ்லானா அல்ஹாஜ் N.M. அமானுல்லாஹ் இம்தாதி ஹழ்ரத் புதுக்கோட்டை அவர்களும், மாவட்ட செயலாளராக மவ்லானா அல்ஹாபிழ் S.A.ஜாபர் அலி உலவி ஹழ்ரத் ஜெகதாப்பட்டிணம் அவர்களும், மாவட்ட பொருளாளராக மவ்லானா S.சதக்கத்துல்லாஹ் தாவூதி ஹழ்ரத் புதுக்கோட்டை அவர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.
19.01.2016 செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டதில் ஆறு வட்டாரங்களை உள்ளடக்கிய துணை பொறுப்புகளுக்கு கீழ்காணும் உலமாக்கள் மவ்லவி M.J.முஹம்மது முஹ்யித்தீன் தாவூதி ஹழ்ரத் அறந்தாங்கி வட்டாரம், மவ்லவி N.செல்வகனி மரைக்காயர் தாவூதி ஹழ்ரத் இலுப்பூர் வட்டாரம், மவ்லவி B.ஜவாஹிர் ஹுசைன் ஸிராஜி ஹழ்ரத் கடற்கரை வட்டாரம் ஆகியோர் துணைத் தலைவர்களாகவும், மவ்லவி அப்ழலுல் உலமா M .செய்யிது இப்ராகிம் முனீரி M .A ஹழ்ரத் புதுக்கோட்டை வட்டாரம், மவ்லவி A.S.முஹம்மது ரியாஸ்கான் உலவி ஹழ்ரத் திருமயம் வட்டாரம், மவ்லவி A.பக்ருத்தீன் பத்ரி ஹழ்ரத் ஆலங்குடி வட்டாரம் ஆகியோர் துனைச்செயலாளர்களாகவும் தேர்வு செய்யப்பட்டனர் .
வெள்ளி, 15 ஆகஸ்ட், 2014
மாநில ஜமாஅத்துல் உலமா தேர்தல் களம்
தமிழ்
மாநில ஜமாஅத்துல் உலமா தேர்தல் உலமாக்களுக்கு மத்தியில் அதிக
எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா தேர்தல் இன்ஷா
அல்லாஹ் வருகிற 19-08-2014 செவ்வாய்கிழமை அன்று சேலத்தில் நடைபெறவுள்ளது.
அதுசமயம், தலைவர் பதவிக்கு (1) தற்போதைய தலைவரான லால்பேட்டை அப்துர்ரஹ்மான்
ஹழ்ரத் அவர்களும், (2)தற்போதைய சென்னை மாவட்ட தலைவரான வடபழனி தர்வேஷ்
ரஷாதி ஹழ்ரத் அவர்களும், செயளாலர் பதவிக்கு
(1) தற்போதைய சிவகங்கை மாவட்ட தலைவர் முஹம்மது ரிழா பாகவி ஹழ்ரத்
அவர்களும், (2)ஈரோடு தாவூதிய்யா பேராசிரியர் சுல்தான் ஹழ்ரத் அவர்களும்,
பொருளாளர் பதவிக்கு (1) மதுரை ஒத்தக்கடை காசிம் ஹழ்ரத் அவர்களும், (2)
வேலூர் பாக்கியாத் பேராசிரியர் இல்யாஸ் ஹழ்ரத் அவர்களும்,
போட்டியிடுகின்றனர். சமூகத்துக்கும், உலமாக்களுக்கும் பெருமை சேர்க்கிற,
ஒற்றுமையை உண்டாக்குகிற சீரிய நிர்வாகம் அமைய துஆ செய்யுங்கள்
சத்தியமேவ ஜெயதே!
فأتياه فقولا إنا رسولا ربك فأرسل معنا بني
إسرائيل ولا تعذبهم قد جئناك بآية من ربك والسلام على من اتبع الهدى(47)20:
இன்று
நாம் 68 வது சுதந்திர தினத்தை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.
ஒரு பெரிய நாட்டின் –சுதந்திரக் குடிமக்கள் என்ற மகிழ்ச்சி இன்றைய நமது மகிழ்ச்சியை அதிகப்படுத்துகிறது.
பரப்பளவில் இந்தியா ஏழாவது இடத்தில் உள்ள நாடு ரஷ்யா, கனடா, அமெரிக்கா, சைனா பிரேசில் ஆஸ்திரேலியாவுக்கு
அடுத்தபடியாக இந்தியா உள்ளது.
·
உலகின் மிகப்பெரிய குடியரசு
நாடாகத் திகழ்கிறது
·
இந்தியாவின் மக்கள்தொகை 121 கோடிக்கும் மேலாக
மதிப்பிடப் பட்டு, உலக நாடுகளில், இந்தியா மக்கள் தொகையில்
இரண்டாமிடம் வகிக்கிறது
·
ஒரு இந்தியக் குடிம்கன் சுமார் 3500 கிலோ மிட்டர்கள் வரை
பாஸ்போர்ட் விசா இன்றி பயணிக்க முடியும். வியாபாரம் செய்ய முடியும். நிலம் வாங்க
முடியும். அரசியல் செய்ய முடியும்.
·
சிங்கப்பூர் 70 கிலே
மீட்டர். பஹ்ரைன் 75 கிலோ மீட்டர்
பல தரப்பட்ட
நிலப் பரப்புக்களையும்-
இன்ங்களையும்
–– மொழி
களையும்
கொண்ட
நாடு
பண்பட்ட
கலாச்சாரத்தை
கொண்ட
நாடு
சுதந்திரமான வாழ்கைக்கான அதிகபட்ச் உத்தரவாத்த்தை அரசியல்சாசண ரீதியாக மக்களுக்கு வழங்கும் நாடு.
எட்டாம் நூற்றாண்டிலிருந்து 19 ம் நூற்றாண்டு வரை இந்த நாட்டை முஸ்லிம்கள் முழுமையாகவோ ஒரு பகுதியாகவோ ஆட்சி
செய்து வந்தனர்.
17ம நூற்றாண்டில் வியாபாரிகளாக உள்ளே வந்த ஆங்கிலேயர்கள் 19 நூற்றாண்டில் முழுமையாக நாட்டை அடிமைப்படுத்தினர்.
ஆங்கிலேயர்கள் இந்தியம் மக்களை அடிமைப்படுத்தினர், சுதந்திரத்தை பறித்தனர், நாட்டின் வளத்தை கொள்ளை
அடித்து எடுத்துச் சென்றனர். சொல்லெனா துயரத்திற்கும்
துன்பத்திற்கும் மக்களை உள்ளாக்கினர்.
நூறு ஆண்டுகால சுதந்திரப் போராட்ட்த்திற்குப் பிறகு நம்முடைய நாடு 1947ல் ஆங்கிலேயர்களிடமிருந்து
விடுதலை பெற்றது.
இந்திய விடுதலைக்கான போராட்டம் அகிம்சை வழிப் போராட்டம் என்று
சொல்லப்பட்டாலும் மக்கள் அடைந்த இம்சை மிக்க்
கொடுமையானது. நாகரீக சமூகம் வெட்கப்படக் கூடியது.
இந்திய சுதந்திரத்திற்கு அடித்தளமும்,
பொருள் வசதியும் அளித்தவர்களில் முஸ்லிமக்ள் முதல் இடம் வகித்தார்கள்.
இந்திய விடுதலைக்காக சிறை சென்றவர்களிலும் உயிர்
நீத்தவர்களிலும் இஸ்லாமியர் அதிகமாகவே இருந்தனர். அவாகளது மக்கள் தொகை விகிதாச்
சாரத்தை விட விடுதலைப் போரில் மாண்டோர் எண்ணிக்கையின் விகிதாச்சாரம் அதிகமாகவே
இருந்தது. - குஷ்வந்த்சிங் இல்லஸ்ட்ரேட் வீக்லி 29-12-1975.
உலகம் முழுவதும் ஆங்கிலேயர்களை எதிர்க்கவே முடியாது என்று
எண்ணிக் கொண்டிருந்த நேரத்தில் – ஆங்கிலேயர்களுக்கு
எதிராக செயல்படவோ – பேசவோ – ஏன்
சிந்திக்கவோ கூட தயங்கிக் கொண்டிருந்த நேரத்தில் ஆஙக்லேயர்கள் தங்களது முதல்
தோல்வியை ஆப்கானிஸ்தானத்தில் ச்ந்தித்தனர்.
மனிதர்கள் மனிதர் யாரிடமும் அடிமைப் பட்டுக் கிடப்பதை
அங்கீகரிக்காத இஸ்லாம் ஆப்கானியர்களுக்கு அந்த வீர உணர்வை தந்திருந்த்து,
லாயிலாக இல்ல்ல்லாஹ் என்பது வெறும் கொள்கை சார்ந்த விசயம்
மட்டுமல்ல. அது தான் முஸ்லிம்களை பொறுத்து அரசியல் கோட்பாடுமாகும்.
இபாத்த் என்பதும் அப்திய்யத் என்பதும் ஒரு வேர்ச் சொல்லின்
கிளைகளே!
அல்லாஹ்வை தவிர வேறு யாருக்கும் அடிமையாவதில்லை. என்ற
கோட்பாடுதான் இன்றளவும் முஸ்லிம்களை ஆதிக்க சக்திகளுக்க் எதிரக தீரத்தோடு அணி
திரட்டிக் கொண்டிருக்கிறது.
இந்திய சுதந்திரப் போராட்டமும் அப்படித்தான்
அடிமைப்பட்டுக்கிடக்க விரும்பாத முஸ்லிம்களே சுதந்திரப் போராட்ட்த்தை முன்னொடுத்துச்
சென்றனர்.
ஆங்கிலேயர் இந்தியாவில் காலூன்றியதை முதலாவ்தாக தடுத்தவர்
வங்கச் சிங்கம் என்று போற்றப்படுகிற சிராஜுத்தவ்லா
1757-ல் ஆங்கிலேயரை வங்காளத்தை ஆண்ட சிராஜ்-உத்-தௌலா சந்தித்த பிளாசிப் போதான் பிட்டீஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராய் இம்மண்ணில் நடந்த முதல் பெரிய யுத்தம். இப்போரில் கைதாகும் இந்திய வீராகளை அடைப்பதற்காக ஆங்கிலேயர் கட்டிய சிறைக்கூடத்திலேயே ஆங்கிலேயர்களைக் கைது செய்து அடைத்த மாவீராதான் தௌலா.
கல்கத்தா துறைமுகத்தில் ஆங்கிலேயரை எதிகொண்ட தௌலாவுக்கு
இயற்கை மட்டும் ஒத்துழைத்திருந்தால் இந்திய சாத்திரமே மாறியிருக்கும். நான்கு மணி
நேரம் பெய்த கடுமையான மழையினால் தௌலா படையின் வெடிமருந்துகள் நனைந்தன. அவரது
முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
வங்காளத்தில் சிராஜ்-உத்-தௌலா சிந்திய ரத்தத்தின் மீதுதான்
பிட்டீஷ் ஏகாதிபத்தியம் தன் முதல் கால் கோளை இந்திய
மண்ணில் ஊன்றியது. ஆமாம் இந்தியாவில் பிட்டீஷான் ஆட்சி முதலில் வங்காளத்தில்தான்
ஏற்பட்டது.
முஸ்லிகளை முறியடித்துத்தான் ஆங்கிலேயர்கள் இந்தியாவில்
கால் பதித்தனர்.
பிரிட்டிஷாரின் ஆதிக்கத்தை தென்னாட்டில் வீரபாண்டிய கட்டபொம்மன் எதிர்த்தார் என்றால் அவரது படையில் முக்கியப்
பங்கு வகித்தவர்கள் முஸ்லிம்கள்
பேராசியா நா.வானமாமலை பதிப்பித்து 1971-இல் வௌயான வீரபாண்டிய கட்டபொம்மு கதைப்பாடல் இராமநாதபுரத்திற்கு ஜாக்ஸன் துரையைச் சந்திக்க கட்டப்பொம்மன் சென்றபோது அவரோடு சென்ற தளபதிகளைப் பட்டியலிட்டுக் காட்டுகிறது
வீரபாண்டிய கட்டபொம்மு கதைப்பாடல் இஸ்லாமிய தளபதிகள் பலரும் உடன் வந்ததை இவ்வாறூ குறிப்பிடுகிறது
மம்மது தம்பியும்
முகம்மது தம்பியும்
மாக்கமுள்ள தம்பி வரிசையுந்தான்
தர்ம குணவான் இபுராமு சாகிபும்
தம்பி இசுமாலு
ராவுத்தனும்
தென்னிந்தியக் கிளர்ச்சியில் மருதுபாண்டியர் படையைக்கு தலைமை தலைமை தாங்கி நடத்திச் சென்றவருள் ஒருவர் தான் சேக் உசேன்.
இச்சப்பட்டி அமில்தார் சேக் உசேன் என்று அழைக்கப்பட்ட இவர் சுதந்திரக் கிளர்ச்சிப் படையின் முதல் தாக்குதலுக்குத் தலைமை தாங்கினார். இவரைத் திண்டுக்கல் புரட்சிக் கூட்டத்தின் எழுச்சி வீரர் சிறந்த போராளி என்று வரலாற்று அறிஞர் கே.ராஜய்யன் குறிப்பிடுகிறார்.
இந்த சேக்உசேன் மருதுபாண்டியர் வீழ்ச்சியின் போது ஆங்கிலேயரால் கைது செய்யப்பட்டு பினாங்கு தீவில் சங்கிலியால் பிணைக்கப்பட்டு நடமாடக் கூட முடியாமல் பசி பட்டினியால் வாடி அங்கேயே காலமானார்.
1867 ல் நடைபெற்ற் முதல் சிப்பாய் கலகம் என்பது இஸ்லாம் பன்றியை ஹரமாக்கியிருக்கிறது என்ற சட்ட்த்திலிருந்து
தோன்றியதாகும்.
பன்றிக் கொளுப்பு தடவப் பட்ட துப்பாக்கித் தோட்டாக்களை பல்லில் கடித்து பயன்படுத்த வேண்டிய சூழ்நிலைக்கு கிழக்கிந்திய படையினர் இந்திய வீர்ர்களை நிர்பந்தித்த போது அதை எதிர்த்து முஸ்லிம் வீர்ர்கள் நிகழ்த்திய போராட்டம்தான் சிப்பாய் கலகம் என்று கூறப்பட்டது. அதைதான் முதல்இந்திய சுதந்திரப் போர் என்று வரலாறு வர்ணிக்கிறது.
இந்த போராட்ட்டத்திற்காக முஸ்லிம்கள் எப்படி
முன்னின்றார்கள் என்பதை இந்துத்துவ ச்கதிகள்
கொண்டாடுகிற சவர்கார் தன்னுடைய எரிமலை என்ற நூலில் இப்படி குறிப்பிடுட்கிறார்.
இந்த நேரத்தில் ராணுவ முகாம்களுக்குள் இருந்த இந்திய
வீரர்களிடம் பிட்டீஷாருக்கு எதிரான போராட்ட உத்வேகத்தைத் தங்கள் ரகசியப்
பிரச்சாரங்கள் மூலம் முஸ்லிம் பக்கீர்கள் ஏற்படுத்தினார்ககள். ஆயிரக்கணக்கான
பக்கீர்கள் பல இடங்களுக்கும்சென்ற சிப்பாய்கள் மனதில் விடுதலைத் தீயை மூட்டினர்.
ராணுவ முகாம்களுக்குள் நுழைந்து வீரர்களிடம் பிரச்சாரம் செய்தனர். ( சாவர்க்கர் எமலைபக்கம்.85)
1857சிப்பாய்க் கலகத்திற்க் பிறகு தான் பகதூர்ஷா ஜாபர் தில்லியிலிருந்து வெளியேற்றப் பட்டார். தில்லியில் அரியணையில் இருந்த பகதூர் ஷா ஜாபரை பதவியிலிருந்து
அகற்றிய பிறகுதான் பிரிட்டிஷ் சாம்ரஜத்தை இந்தியாவில் நிறுவ முடிந்த்து.
மாமன்னர் பகதுர்ஷாவை குடும்பத்துடன் கைது செய்து ஜீனத் மஹல் மாளிகையில் சிறை வைத்த ஆங்கிலேயர்கள் ஒரு நாள் காலை உணவை துணியால் மூடப்பட்ட பெரிய தட்டுகளில்
எடுத்து வந்தனர். உடன் வந்த மேஜர் ஹட்ஸன் முகத்திலோ விஷமச் சிப்பு.
கம்பென்யின் பாசுகள் இவை! என்றவனாக ஹட்ஸன் உணவுத் தட்டுகளை
மூடியிருந்த துணிகளை அகற்றினான். அதிலே. பதுர்ஷாவின் மகன்கள்
மிர்ஜா மொஹல், கிழ்ரு சுல்தான் இருவரின் துண்டிக்கப்பட்ட தலைகள் அதிலே இருந்தன,.
அப்போது பகதுர்ஷா ஜாபர் சொன்ன வார்த்தைகளை வரலாறு பதிவு
செய்து வைத்திருக்கிறது. : தைமூரின் வம்வத் தோன்றல்கள் தமது முன்னோர்களுக்கு
இவ்வாறு தான் தங்கள் புனிதத்துவத்தை நிரூபிப்பார்கள்!
பகதுர்ஷாவின் கண்களில் கண்ணர் வராததைக்
கண்டு ஹட்ஸன் கேட்டான்: உமது கண்களில் என்ன... நீர் வற்றி விட்டதா?
பகதுர்ஷா சொன்னார் : அரசர்கள் அழுவதில்லை!
சாவர்க்கர் எரிமலையில் எழுதுகிறார்.
கேப்டன் ஹாட்ஸன் பகதுர்ஷாவின் மூன்று இளவல்களைச் சுட்டுக்
கொன்றான். அந்த உடல்கள் போலிஸ் ஸ்டேசனுக்கு முன் கழுகளுக்கு இரையாகும்படி
எடுத்தெரியப்பட்டன. அவை வெகுநேரம் வரை கழுகளுக்கு ஆகாரமான பின்னர் தான் ஆற்றில்
இழுத் தெரியப்பட்டன.- பக்கம் 296-297.
பகதூர் ஷா ஜாபரை தில்லி அரியணையில் உட்கார வைக்க இந்திய
மக்கள் அனைவரும் திரண்டு போரடிய போதும். ஆங்கிலேயரின் படைபலத்துக்கும் குயுக்திக்கும்
பன பலத்திற்கும் முன் அது வெற்றி பெறவில்லை. பகதூர்ஷா ஜாபரை ஆட்சிய்லிருந்து அக்ற்றிய
பிறகே இந்தியாவில் பிரிட்டிஷாரின் சாம்ராஜயம் ஸ்தாபிதமாயிற்று,
அப்போது தில்லியில் இருந்த முஸ்லிம்கள் தங்களது வீடுகளையும் உடமைகளையும் அப்படியே விட்டு வௌயேற்றப்பட்டனர். அவர்களுடைய வீடுகளை
ஆங்கிலேயர் பறிமுதல் செய்தனர். 1859 வரை அவர்கள் திரும்ப வந்து
குடியேற அனுமதிக்கப்படவில்லை. முஸ்லிம்களின் அசையா சொத்தின் மதிப்பில் நுற்றில்
முப்பத்தைந்து பங்கினைத் தங்களை எதிர்த்து போராடியதற்காக ஆங்கில அரசு தண்டமாக
அபகரித்து. – ( திவான் இந்திய விடுதலைப் போரில் தமிழக முஸ்லிம்கள் பக்கம்57. )
நாடு ஆங்கிலேயர்களிடம் முழுமையாக அடிமைப் பட்ட பிறகு அந்த அடிமைத்தலையிலிருந்து நாட்டையும் மக்களையும்
மீட்க போராட்டக் காரர்களும் சாமாண்ய மக்களும் பட்ட துயரங்கள
கணகற்றவை. தலைவர்களுடைய் சிறைவாசங்களைத் தான் வரலாறு குறித்து வைத்திருக்கிறது, சாமாண்ய மக்களின் தியாகங்கள் இன்னும் காற்றில் கரையாமல் சுதந்திர இந்தியாவை பார்த்துக் கொண்டிருக்கின்றன. படிப்பை
திருமணத்தை குடும்பத்தை தொழிலை உதறியவர்கள்
பல்லாயிரக்கணகாணோர் உண்டு,
அந்த்தமான் போன்ற தீவுகளில் அடைக்கப் பட்டு மிருகத்தினும் கீழான வாழ்க்கைக்கு தள்ளப்பட்டோர் ஏராளமானோர் உண்டு.
அதிலும் முஸ்லிம்களின் பங்களிப்பு அதிகமே
அந்தமான் சிறை என்பதே கூட முஸ்லிம் போராளிகளுக்காக கட்டப்பட்ட்தே என்று ஒரு வரலாறு சொல்கிறது.
இத்தகைய நெருக்கடியான காலகட்ட்த்திலும் சுதந்திரத்திற்கான போராட்டத்தை மிகத் துணிச்சலோடு அச்சமினி முன் னெடுத்துச்
சென்றவர்கள் முஸ்லிம்கள்
பூரண சுத்ந்திர முழக்கம் – ஹழரத் மொஹானி
1929 ஆம் ஆண்டு டிசம்பர் 29 - இல் லாகூரில் கூடிய காங்கிரஸ்
மாநாட்டில்தான் இந்தியவுக்கு புரண சுதந்திரம் வேண்டும் என்ற தீர்மானம் முன் வைக்கப்பட்டது.
ஆனால் அதற்கு எட்டு ஆண்டுகளுக்கு முன்பே பூரண சுதந்திரமே
எங்கள் பிறப்புமை என்ற கோசத்தை வைத்தவர் ஓர் இஸ்லாமிய மார்க்க
அறிஞர் ஆவார்.
(B.l Grover,S.grover,A New Look
At Modern Indian History, P.426.
1921 - இல் அஹமதாபாத்தில் கூடிய காங்கிரஸ் மாநாட்டில் ஒரு
தீர்மானத்தை பிரதானமாக முன் மொழிந்தனர். இந்தியாவிற்கு டொமினிக் அந்தஸ்தினை அதாவது
பாதுகாக்கப்பட்ட சுதந்திரத்தினை வழங்க வேண்டும் என்பதே அத்தீர்மானம். டோமினிக்
அந்தஸ்து இந்தியாவிற்கு வழங்கப்பட்டால் ஆட்சியில் ஆங்கிலேயருடன் இந்தியரும்
பங்கேற்கும் வாய்ப்பு உருவாகும் என்று காங்கிரஸின் மூத்த தலைவர்கள் கருதினர்.
மிகப்பெரும் தேசியத் தலைவரும் கிலாபத் இயக்கத் தலைவர்களுள்
ஒரவருமான மௌலானா ஹஜ்ரத் மொஹானி அவர்கள் மட்டும் இத்தீர்மானத்தை எதிர்த்து குரல்
கொடுத்தார். ஆங்கிலயரிடமிருந்து நாம் பெறவேண்டியது பாதுகாக்கப்பட்ட சுதந்திரமான
டொமினிக் அந்தஸ்தல்ல. ஆங்கிலேயர் இம்மண்ணிலிருந்து முழுமையாக
வௌயேறி இம்மண்ணின் மைந்தர்களிடம் இந்த தேசத்தை ஒப்படைக்கின்ற புரண சுதந்திரம்
ஆகும் என்றார்.
புரண சுயராஜ்யம் (Complete
Indepedence Nation) தீர்மானத்தை முதன் முதலாக
முன்மொழிந்து ஹஜ்ரத் மொஹானி ஆற்றிய தீர்க்கமான உரையைக் கேட்ட மாநாட்டுப்
பங்கேர்ப்பாளர்கள் இம்மாநாட்டில் ஹஜ்ரத் மொஹானியின் புரண சுயராஜ்ய கோசம்
தீர்மானமாக நிறைவேற்றப்படாதா என்ற ஆர்வத்துடன் இருந்தனர்.
ஆனால் காந்தியடிகள் இத்தீர்மானத்தை வன்மையாக எதிர்த்தார்.
அதனால் ஹஜ்ரத் மொஹானியின் தீர்மானம் நிறைவேற்றப்படாமல் போயிற்று.ழூ
(Young India, May 4 , 1992; Ref; Shan Muhammad, Freedom
Movement in India- The Role of Ali Brothers, PP.159-60, 164-65.)
பின்னால் என்ன நடந்த்து? 1931 ல் பூரண
சுதந்திர தீர்மாணத்தை மறுத்த காந்திஜி 1929 லாகூர் காங்கிரஸ் மாநாட்டில்
அதே புரண சுயராஜ்யம் கோரிக்கையை முன் வைத்தார்.
காந்தியின் இந்த முடிவுக்குப் பிறகு ஹஜ்ரத்
மொஹானி மேலும் தீவிரமாக பங்காற்றினார். பூரண சுதந்திரம் கோரிக்கையை 1937 -இல் லக்னோவில்நடைபெற்ற முஸ்லிம் லீக் மாநாட்டிலிம் தீர்மானமாக நிறைவேற்றச் செய்தார்.
மிகச் சிறந்த எழுத்தாளராள்ரான ஹஜ்ரத் மொஹானி, உருது
முஹல்லா என்ற பத்திரிக்கையை ஆரம்பித்தார்; அப்பத்திரிக்கை பிரிட்டீஷ்
ஏகாதிபத்தியத்திற்கு எதிராக மக்களைச் சிந்திக்க தூண்டும் கட்டுரைகளை வெளியிட்டது..
ஒருமுறை உருது முஹல்லாவில் பிரிட்டீஷாருக்கு எதிரான கடும் வார்த்தைகளைத் தாங்கிய ஓர் இளைஞனின் கவிதை பிரசுரமானது. அக்கவிதை ஏற்படுத்திய சலசலப்பினால் கொதித்துப்போன ஆங்கில அரசு ஹஜ்ரத் மொஹானிக்கு நோட்டீஸ் அனுப்பியது.
ஒருமுறை உருது முஹல்லாவில் பிரிட்டீஷாருக்கு எதிரான கடும் வார்த்தைகளைத் தாங்கிய ஓர் இளைஞனின் கவிதை பிரசுரமானது. அக்கவிதை ஏற்படுத்திய சலசலப்பினால் கொதித்துப்போன ஆங்கில அரசு ஹஜ்ரத் மொஹானிக்கு நோட்டீஸ் அனுப்பியது.
அக்கவிதையை ஏழுதியவர் யார் என்பதை எங்களுக்கு
அறிவிக்க வேண்டும் என்று அந்த கேட்ட்து. அவரை காட்டிக் கொடுக்க ஹஜ்ரத் மொஹானி மறுத்து விட்டார்.
கவிதையைப் பிரசுரித்த பத்திரிக்கையின்
ஆசிரியர் நான், எனவே அதற்கு
நான் தான் பொறுப்பு. எழுதியவரை அடையாளம் காட்டமுடியாது. வேண்டுமானால் என்மீது
நடவடிக்கை எடுங்கள் என்று நோட்டீசுக்குத் துணிச்சலுடன் பதிலளித்தார்.
ஆங்கில அரசு ஹஜரத் மொஹானி மீது நடவடிக்கை எடுத்தது. கோர்ட்டுக்கு அவரை அலைக்களித்தது. இறுதியில் ஆறு மாதச் சிறைத் தண்டனை வழங்கியது. உருது முஹல்லா பத்திரிக்கையைத் தடை செய்தது. அப்பத்திரிக்கை அச்சிடப்பட்ட ஹஜ்ரத்துக்கு சொந்தமான அச்சுக்கூடத்தை ஜப்தி செய்தது.
''யாரோ எழுதிய கவிதைக்காக நீங்கள் இத்தனைத் துன்பங்களை அனுபவிக்க வேண்டுமா?'' - என்று அன்னாரிடம் கேட்டபோது, அது யாரோ எழுதிய கவிதைதான். ஆனால் எனக்கு உடன்பாடான கவிதை. என் தேசநலன் நாடும் வார்த்தை களைச் சுமந்த கவிதை. அக்கவிதையை என் பத்திரிக்கையில் பிரசுரித்ததற்காக நான் பெருமைப் படுகிறேன். அதற்காக எனக்கு இத்தணடனை என்றால், என் தேசத்தின் விடியலுக்காக இத்தண்டனையை மகிழ்வோடு ஏற்கிறேன்!. - என்று பதிலளித்தார் ஹஜ்ரத் மொஹானி.
ஹஜ்ரத் மொஹானி அவர்கள் கைது செய்யப்படும்போது அவரது மனைவியார் நிறைமாதக் கர்ப்பிணியாக இருந்தர். குழந்தையை பிரசவித்த்தும் கணவரிடம் தன்னுடைய வாரிசைக்காட்ட குழந்தையைக் கையில் ஏந்திக் கொண்டு ஒவ்வொரு சிறைச்சாலையாக அவரது மனைவி அலைந்தார். எந்தச் சிறையில் அவர் அடைக்கப் பட்டிருக்கிறார் என்பதைக் கூற ஆங்கில அரசு மறுத்து விட்ட்து.
ஆங்கில அரசு ஹஜரத் மொஹானி மீது நடவடிக்கை எடுத்தது. கோர்ட்டுக்கு அவரை அலைக்களித்தது. இறுதியில் ஆறு மாதச் சிறைத் தண்டனை வழங்கியது. உருது முஹல்லா பத்திரிக்கையைத் தடை செய்தது. அப்பத்திரிக்கை அச்சிடப்பட்ட ஹஜ்ரத்துக்கு சொந்தமான அச்சுக்கூடத்தை ஜப்தி செய்தது.
''யாரோ எழுதிய கவிதைக்காக நீங்கள் இத்தனைத் துன்பங்களை அனுபவிக்க வேண்டுமா?'' - என்று அன்னாரிடம் கேட்டபோது, அது யாரோ எழுதிய கவிதைதான். ஆனால் எனக்கு உடன்பாடான கவிதை. என் தேசநலன் நாடும் வார்த்தை களைச் சுமந்த கவிதை. அக்கவிதையை என் பத்திரிக்கையில் பிரசுரித்ததற்காக நான் பெருமைப் படுகிறேன். அதற்காக எனக்கு இத்தணடனை என்றால், என் தேசத்தின் விடியலுக்காக இத்தண்டனையை மகிழ்வோடு ஏற்கிறேன்!. - என்று பதிலளித்தார் ஹஜ்ரத் மொஹானி.
ஹஜ்ரத் மொஹானி அவர்கள் கைது செய்யப்படும்போது அவரது மனைவியார் நிறைமாதக் கர்ப்பிணியாக இருந்தர். குழந்தையை பிரசவித்த்தும் கணவரிடம் தன்னுடைய வாரிசைக்காட்ட குழந்தையைக் கையில் ஏந்திக் கொண்டு ஒவ்வொரு சிறைச்சாலையாக அவரது மனைவி அலைந்தார். எந்தச் சிறையில் அவர் அடைக்கப் பட்டிருக்கிறார் என்பதைக் கூற ஆங்கில அரசு மறுத்து விட்ட்து.
மூன்று நாட்கள் பல சிறைகளுக்கும் அலைந்த பிறகு இறுதியில் அவர் தன் கணவனைச்
சந்தித்தார்..தனது வாரிசை முதன் முதலாகப் பார்த்த ஹஜ்ரத்
மொஹானி அவர்கள், சிறைக்
கம்பிகளினூடே கைகொடுத்து குழந்தையை வாங்கி முத்தமிட்டார்..
சிறை விதிகளை மீறி நடந்தார் என்று குற்றம்
சாட்டி மேலும் இரண்டாண்டுகள் சிறைத் தண்டனை வழங்கியது ஆங்கிக அரசு.
இந்திய விடுதலைப் போராட்டம் என்பது ஆண்களை மட்டுமே கொண்ட்து
அல்லது. சமூகத்தின் அனைத்து தரப்பாரையும் கொண்டது. ஏராளமான பெண்கள நேரடியாக் களத்தில் இறஙகி ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடியுள்ளனர், அந்த வகையிலும் முஸ்லிம்
பெண்களின் பங்களிப்பு அபரிமிதமானது,
இந்திய ஆட்சியாளர்கள் ஆங்கிலேயருக்கு எதிராக
ஒருங்கிணைந்தபோது அதில் அரசாண்ட இரண்டு வீரமங்கையர் இருந்தனர். ஒருவர் ஜான்சிராணி
லக்குமிபாய் மற்றொருவர் உத்திரப்பிரதேசத்தில் ஔத் (Outh) என்ற குறுநிலப்பகுதியை ஆண்ட பேகம் ஹஜ்ரத் மஹல் ஆவார். Begum of Outh
பேகம் என்பது இவரது பெயர், "ஹஜ்ரத் மஹல்" என்பது மற்றவர்களால் போற்றி வழங்கப்பட்ட பெயர். ஔத் (Outh) என்ற குறுநிலப்பகுதியை ஆண்டுவந்த
அவரது கணவரை பிரிடிஷ்காரர்கள் கொல்கத்தாவுக்கு நாடு கடத்திய பிறகு, அம்மாநிலத்தை தன் கட்டுப்பாட்டில்
எடுத்து
நிர்வகித்தார்.
அவரது நிர்வாகத்திறனை வரலாற்றாசிரியர்கள் வானளாவ
பராட்டுகிறார்கள்.
ஒரு
கட்டத்தில் தன்னுடைய மகன் பிரிஜிஸ் காதரை மன்னனாக்கிவிட்டு, நாட்டை காப்பதற்காக அவரே ஆங்கிலேயரை எதிர்த்து
களத்தில் இறங்கிப் போராடினார்,
ஒரு சமயம் பிரிட்டிஷ் அதிகாரியான சர் ஹென்றி லாரன்ஸ் என்பவரையும்,
அவரை சுற்றி இருந்த மற்றும் சில அதிகாரிகளையும் வளைத்து பிடித்து ஒரு தனி பெண்மணியாக எதிர் கொண்டு சர் ஹென்றி லாரன்ஷை தன் கையால் சுட்டு வீழ்த்தினார்.
இறுதியில்
அவருடைய
மாநிலத்தையும்
பிரிட்டிஷ்கார்ர்கள்
சர் கேம்பால் தலைமையில் கைப்பற்றிய போது பொது மன்னிப்பு பெற்று சவுகரியமாக வாழ் மறுத்து
விட்டார் என்று வரலாறு குறிப்பிடுகிறது,
வீரமங்கை ஹஸன் மஹ்பர்
இதே போல ஜான்ஸிராணியுடன் பிட்டீஷாருக்கு எதிராகப்
போர்க்களத்தில் வாளேந்தி நின்ற மற்றொரு வீரமங்கை ஹஸன் மஹ்பர் பேகம். ஜான்ஸியின்
ஒரு படைப்பிவுக்குத் தலைமை தாங்கிய மஹ்பர் 1858 ஜுன் 18 - இல் நடைபெற்ற குவாலியர் யுத்தத்தில் ஜானஸியுடன் வீர மரணம்
அடந்தார்.
ஜுலைகா பேகம்
மௌலானா அபுல் கலாம் ஆசாத் அவர்களின் மனைவி ஜுலைகா
பேகம்
மிகவும் தைரியமிக்க பெண்மணி. சுதந்திர
போராட்டத்தில் காந்தியாலும்,
நேருவாலும் மிகவும் மதிக்கத்தக்க, உன்னதமான மனிதன் அபுல் கலாம் ஆசாத் 1942-ல் கைது செய்யப்பட்ட போது, ஜுலைகா காந்திக்கு ஒரு கடிதம் எழுதுகிறார்.
அதில் "என் கணவர் ஒரு வருடம் சிறைத்
தண்டனை மட்டுமே பெற்றுள்ளார். அவர் தன் நாட்டின் மீது வைத்து இருந்த பற்றுக்கு, அவருடைய பக்குவப்பட்ட மனதிற்கும் நாங்கள் எதிர்பார்த்ததை
விட மிகவும் குறைந்த தண்டனையே, இன்று முதல் இந்த
வங்காளத்தின் முழு கிலாபாத் அமைப்பையும் நானே பொறுப்பேற்று நடத்துவேன்" என்று
அந்த கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார். தன் கணவனின் பொறுப்பை மிக எளிதாக
தனதாக்கி கொண்டு தன்னுடைய பங்கையும் சுதந்திரத்திற்காக முழுமையாய்
வெளிக்கொணர்ந்தவர்.
கதர் ஆடை
இந்திய சுதந்திரப் போராட்ட்த்தின் பிரதான அடையாளம் கதராடை. சுதந்திரப் போராட்ட வீர்ர்களான - என் தோள்களின் மீது இரண்டு சிங்கங்கள் அமர்ந்திருக்கின்றன என்று காந்திஜியால் வருணிக்கப்பட்ட - முஹம்மது அலி சவுகத் அலி சகோதரர்களின் தாயாரான ஹாஜியா ஆலாஜிபானு என்ற ஃபீயம்மாள் தான் கைராட்டையில் நூற்ற நூலால் நெய்யப்பட்ட ஆடைக்கு கதர் என்று பெயாட்டவர்.
தன் கையால் நெய்த துணியைக் காந்திஜிக்கு அளித்து இதனைக் கத்ராக (கௌரவமாக) ஏற்றுக் கொள்ளுங்கள் என்றார்.அன்றிலிருந்து தான் அந்த ஆடைக்கு கதர் ஆடை என்ற பெயர் வந்தது.
சுதேசி இயக்கத்தின் கலாச்சார அடையாளமான துணிக்கு கதர்
என்று பெயாட்டவர் ஒரு முஸ்லிம் தாய் என்ற
பெருமை நம் போராட்ட வரலாற்றுக்கு உண்டு.
ஆயுதப்
போரட்ட்த்தில் முஸ்லிம்கள்
நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் தேசவிடுதலைக்காக ரத்தம் சிந்த
அழைப்பு விடுவித்த போது அவரது இந்திய தேசிய ராணுவத்தில் (Indian National Army) நூற்றுக்கணக்கான இஸ்லாமிய இளைஞர்கள் இணைந்தனர். பர்மா மலேசியா சிங்கப்புல்
வியாபாரங்களிலும் தொழில்களிலும் ஈடுபட்டிருந்த பல இளைஞர்கள் அவரது ராணுவத்தில்
இணைவதில் முந்திக்கொண்டனர்.
நேதாஜி 1943
ஜுலை 2 - இல் சிங்கப்பூரில் ஆரம்பித்த ஆசாத் ஹிந்த் சர்க்கார் என்ற தற்காலிக சுதந்திர இந்திய அரசாங்கத்தின் மந்திரி சபையில் ராணுவ பிரதிநிதிகளாக லெப் கர்னல்ஸ் அஸீஸ் அஹமது, எம்.இஸட் கியானி, இஷான் காதிர், ஷாநாஸ்கான் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
மேலும் கரீம் கனி , டி.எம்.கான், ஹபிபுரஹ்மான் ஆகியோரும் லெப்.கர்னல்ஸ் ஆகப் பணியாற்றியுள்ளனர்.
இதில் லெப். கர்னல் ஹபிபுர்ரஹ்மான் தான் நேதாஜியின் இறப்பு பற்றி உறுதி செய்யும் விமான விபத்து நடந்தது உண்மைதான் என்று கூறியவர்.
இத்தகைய அளப்ப்பெரிய அர்ப்பணிப்புகளால சுதந்திரம் பெற்ற
இந்தியா 68 ஆண்டுகளாக தன்னுடைய் சுதந்திரத்தை
அற்புதமாக பாதுகாத்து உலக அளவில் தனக்கென ஒரு மரியாதையை கொண்டுள்ளது.
உலகின் பல பாகத்திலிம் அமைதியும் நிம்மதியும்
கேளிவிக்குரியாகிவிட்ட நிலையில் இந்திய மண் அமைதிப் பூங்காவாகத் திகழ்கிறது.
பொருளாதார தொழில் நுட்ப வளர்ச்சி கண்ணுக்குத் தெரிகிற
அளவில் வளர்ந்திருக்கிறது.
1991 மார்ச் மாதத்தில் 5.8 பில்லியன் அமெரிக்க டாலர்களாக
இருந்த அந்ந்நியச் செலவாணி கையிருப்பு, 2008 ஜூலையில் 308 பில்லியன் அமெரிக்க டாலர்களாக
அதிகரித்துள்ளது.
2003-ஆம் ஆண்டு நிலவரத்தின் படி
மென்பொருள் ஏற்றுமதி மட்டும் சுமார் 1000 கோடி டாலர் என்ற அளவில் இருந்தது.
அதே நேரத்தில் கவலைக்குரிய அம்சங்கள்
இல்லாமல் இல்லை.
மக்கள் தொகையில் கால் பங்கு வகிப்பவர்கள்
சரியான உணவின்றி வறுமையில் வாழ்கின்றனர்.
அதேபோல ஊழலும் மதவாத சக்திகளில்
ஆதிக்கமும் சுத்ந்திர இந்தியாவிற்கான பெரும் அச்சுறுத்தல்களாக இருக்கின்றன
சுதந்திரம் பெற்ற இந்தியாவில் 68 ஆண்டுகளுக்குப் பிறகு சுத்ந்திரத்திற்கு
சம்பந்தமில்லாதவர்கள் ஆட்சியதிகாரத்தை பெரும் பலத்தோடு கைப்பற்றியிருக்கிறார்கள்.
சுதந்திர இந்தியா என மக்கள் நட்த்திய புனிதப் போராட்டதில்
ஒரு கரும்புகையாக இந்த மாற்றம் நடந்துள்ளது.
அவர்கள் முஸ்லிம்களை இந்த நாட்டின் ஒடுக்கப் பட்ட மக்களாக
மாற்ற நினைக்கின்றனர். ஆனால் அது நடக்காது. ஒருவேளை அத்தகைய நடவடிக்கைகள்
மேற்கொள்ளப் படுமானால் ஆனாளப்பட்ட ஆங்கிலேயர்களை விரட்டியடித்தவர்களால் ஒரு
எழுச்சிக்கு தயாராக அதிக நேரம் பிடிக்காது.
அடிமைத் தளையிலிருந்து விடுதலை பெற போராடுவதும் ஆதிக்க சக்திகளை எதிர்த்து நிற்பதும் நபிமார்களின்வழிமுறையாக இருந்ததது என்பதை திருக்குர் ஆன் சுட்டிக் காட்டுகிறது.
فأتياه فقولا إنا رسولا ربك فأرسل معنا بني
إسرائيل ولا تعذبهم قد جئناك بآية من ربك والسلام على من اتبع الهدى(47)20:
அக்கிரம்ச் சக்திகள் தங்களது வேஷத்தை கலைப்பார்கள் எனில்
நாட்டு மக்கள் இன்னொரு சுதந்திரப் போராட்ட்த்திற்கு தயாராவார்கள். அதற்கு
முஸ்லிம்களே முன்னிற்பார்கள், நிற்க
வேண்டும்.
ஆனால் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கையை முஸ்லிம்கள்
தங்களது மத்த்திற்கு எதிரான நடவடிக்கையாக கருதக் கூடாது, சுதந்திர இந்தியாவின் சமூக நலனுக்கு எதிரான
நடவடிக்கையாக கருத வேண்டும். அதற்கேறப இந்திய மக்களை அநீதிக்கு எதிராக ஒன்று
திரட்டி போராட வேண்டும்.
சுதந்திர இந்தியாவில் இப்போது நடந்து வருகிற விரும்பத்தகாத
நிகழ்வுகளில் முஸ்லிம்கள் மனம் தளர்ந்து விடக் கூடாது. தமது நாட்டை மீட்பதில்
ஆங்கிலேயர்களிடம் காட்டிய தீரத்தை நாட்டு நலனை மீட்பதில் காட்ட வேண்டும். நாட்டின்
பொது அமைதியை காப்பதில் தங்களுக்கு பொறுப்பையும் உணர வேண்டும்.
நமக்கு எதிரான முயற்சிகளை சட்டம் நீதி அதற்கான அரசியல்
போராட்டங்கள் வழியாக சாதிக்க முயல வேண்டும்.
இதற்கு நிறைய பொறுமை தேவை. அர்ப்பணிப்பும் முயற்சியும்
தேவை. முறையான போராட்ட முயற்சிகளும் தேவை. அது தான் 68 சுதந்திரதினத்தில் முஸ்லிம்கள் நினைவில்
வைக்க வேண்டிய செய்தியாகும்.
நம்பிக்கை அளிக்கிற ஒரு தகவலை நிறைவாக சொல்லி முடிக்கிறேன்.
கடந்த சில நாட்களாக ஈரோட்டில் புத்தக கண் காட்சி நடைபெற்றது.
அதில் தினமணி பத்ரிகை சார்பில் ஒரு அரங்கு வைக்கப்பட்டிருந்த்து. சுதந்திர போராட காலத்தின் ஒரு பிரதி போட்டோவாக அந்த
அரங்கில் மாட்டப்பட்டிருந்த்து. அதில் காணப்பட்ட வாசகம்
காந்தி ஆசாத் நேரு கைது.
சுதந்திரத்திற்கான பங்காளர்கள் என யார் என்ன சொன்னாலும்.
வரலாற்றை திருப்பி எழுத முடியாது என்பதற்கான ஆதாரம் அது. அப்படி எழுத
நினைப்பவர்கள் ஒருபோதும் வெற்றி பெற முடியாது.
சத்தியமேவ ஜெயதே!
நன்றி கோவை அப்துல் அஜீஸ் பாகவி
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)